தொலைபேசி

1 1 0
                                        

எனக்கான வரமாய் உன் குரல்...

தொலைபேசி வழியே ஒரு தொடர்பு
என் உயிரின் தொகுப்பு..

தொலைந்து போகும் கடிகாரம்
மருகிப் போகும் மயக்கம்
மனம் என்னும் மாயை

உன் மந்திரக் குரலில்!

என் உயிரின் வரம்
உன் விரல் அருகே..
அழைப்பாயா?

வானமாய் வாகனமாய் மாறத் துடிக்கும் தொலைபேசி
உன் தொடர்பு எல்லைக்குள்
என் தொடர்பாய்.

தொலையும் தொடர்பு
தொடருமோ இன்று!

தொடரும் தொடர்பாய் நாம்?

விதியின் கருவி
நம் உறவின் உயிரி
தொடர் பேசி - நம்
தொலைபேசி...

SwaasamWhere stories live. Discover now