மாயம்

11 1 0
                                        

என் இதயம் எங்கும்
அன்பின் திகழாய்
அவள் உருவம்
சுற்றித் திரியும்.

அவள் இல்லா நொடியில்
அன்பை முழுதும் இருளே
சுற்றித் திரியும்

தேவதை அவள்.
ஏன் மாயம் பூக்கிறாள்..!

என் நிழலும் என்னைச் சுற்ற மறந்து
அவளைச் சுற்றி திரியும்.

என் இதயம் இருளும்
நினைவும் நிழலும்
அவளைச் சுற்றி திரிய

அவள் இல்லா நிலவும்
இருக்கும் உலகைச் சுற்றி திரிய

அவள் எந்தன் உலகாய்
எந்தன் நிலவாய் என்னைச் சுற்றி திரிந்தால்!

தேவதை அவள்
தேவையே அவள்

தேகம் தீ அவள்
என் தேடலாய் அவள்.

SwaasamDove le storie prendono vita. Scoprilo ora