சிவா : தேன்க் யூ எகேய்ன்.. எப்பவும் சுமித்ராவ சிரிக்க வைக்கிறதுக்கு...
அஷ்வின் : எனக்கும் ஒரு தங்க இருக்கா.. பட் இதுவர சிரிச்சதில்ல.. அவ சிரிப்ப எப்பவும் மத்தவங்க கிட்ட இருந்தாலும் பார்த்து ரசிக்கனும் எனக்கு.. சோ என்ன சுற்றி இருக்குர எல்லாரையும் சிரிக்க வைப்பேன்...
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
சிவா : நல்ல விடயம் தான்.. அதூ நீங்க என்கிட்ட விக்ரம் பற்றி கேட்டீங்க.. உண்மய சொல்லனும்னா.. சுமித்ரா இன்னும் திருமணம் முடிக்கவே இல்ல..
அஷ்வின் : வட்.. என்ன சொல்ல வர்ரீங்க..
என அதிர்ச்சியடைந்தவனாய் கேட்டான். சிவாவும் ஏதும் மறைக்காது அனைத்தையும் சொன்னான்.
அஷ்வின் : விக்ரம் கொடுத்து வைக்கல்லன்னு தோனுது..பட் சுமித்ராட மெடிக்கல் கண்டிஷன்ஸ பார்க்கும்போது அவங்க இப்டி இல்லாத ஒர்த்தர எதிர்பார்த்து காத்திருக்குறது நல்லதில்லயே..
சிவா : ம்.. நாங்களும் அத நெனச்சு தான் பயப்பட்றோம்.. அந்த நினைவுகள்ல இருந்து வெளிய கொண்டு வரனும்.. ஆனா எப்டின்னு தான் புரியல்ல..
அஷ்வின் : இந்த வீக் அவட எக்ஸம்காக டய்ம் ஒதுக்குவாங்க.. அந்த நேரம் அவட மூட் எப்டின்னு பார்ப்போம்.. அப்டி ஏதாச்சும் ச்சேன்ஞ் இருந்தா அவவ ஸ்டடி ஸய்ட்ல அதிகமா நுழைவிப்போம்..
சிவா : வில் சீ..
நாட்களும் கடந்தன. சுமித்ரா தனது பரீட்சையில் முழுக் கவனத்துடன் ஈடுபட்டாள்.. எனினும் விக்ரமின் ஞாபகங்கள் அவளை விட்டும் விலகவில்லை. ஆனால் அந்த ஞாபகங்கள் அவளை சிறைப்படுத்தவும் இல்லை. பரீட்சை தினமும் வந்தது. ஆதி,சிவா ஆகியோரும் சுமித்ரா மற்றும் அபி உடன் பரீட்சை நிலையத்திற்கு சென்றனர். அஷ்வினும் அங்கு வந்தான்.