அஷ்வின் : ஹாய் ஆதி.. என்ன பேச்சுல கொஞ்சம் தடுமாற்றம் தெரியிது..
ஆதி : ஆ.. இல்ல.. அப்டி ஒன்னும் இல்ல.. சுமித்ரா .. சுமித்ரா ஒங்க கூடவான்னு கேட்க தான் கோல் பண்ணேன்..
அஷ்வின் : என் கூட இல்லயே ... மோனிங் கோயில்ல பாத்ததுக்கப்ரம் நா அவகூட பேசவும் இல்ல.. என்னாச்சு??? இன்னும் வீடு வரல்லயா...!??
ஆதி : இல்ல அஷ்வின்.. நாங்க அவ க்குவாடஸ்ல தா இருக்கோம்.. சிவாவும் என்கூட தான் இருக்கான்.. சுமித்ராவிற்கு கோல் பன்னோம்.. பட் ஸ்விட்ச் ஓப்ன்னு வர்து.. நா அபி , மீரா இரண்டு பேர்ட்டயும் கேட்டேன்.. பட் அவங்களும் மோனிங் பார்த்ததுக்கு பிறகு பார்க்க பேச இல்லயாம்.. அது தான் நா... ஹெலோ..!!! ஹெலோ அஷ்வின்..!!
சிவா : என்னாச்சு..??
ஆதி : கட் பண்டான்.. எதுவுமே சொல்லல்ல..
சிவா : நா எதிர்ப்பார்த்தது தான்.. சுமித்ராவ தேடி போயிருப்பான்..
ஆதி : டேய்.. நாங்க வேனும்னு தான் இப்டி பண்றோம்ன்னு தெரிஞ்சா பெரிய ப்ரொப்லம் ஆகும்..
К сожалению, это изображение не соответствует нашим правилам. Чтобы продолжить публикацию, пожалуйста, удалите изображение или загрузите другое.
மீரா : அஷ்வின் தேன்க் தான் சொல்வாரு... பட் சுமித்ரா..!
அபி : இந்த கேம்ல நான் இருக்கேன்னு சுமிக்கிட்ட சொல்லிடாதிங்கடா..