வழமை போன்று அன்றும் சுமித்ரா பள்ளிக்கூடம் முடிந்ததும் ஆலமரத்தடிக்குச் சென்றாள், ஆனால் கண்களை கசக்கிய நிலையில் . விக்ரமின் ஞாபகங்கள் அவளை வாட்டியது. சிறிது நேரம் அங்கு அமர்ந்து குழந்தை போல் அழுது விட்டு விடுதியிற்கு சென்றாள். மதிய உணவை உண்ண அமர்ந்தது தான் தாமதம், அவள் நினைவுகள் முழுவதும் அஷ்வின் காலை நடந்து கொண்ட விதத்தையே சுட்டிக் காட்டியது. ஏது செய்வதென்று தெரியாமல் தவித்தாள். மனத்தவிப்பில் கண்ணீர் தாலாட்ட கண்கள் மலர்ந்தன.
வெள்ளை மேகங்கள் பூசிய, தெளிவான நீலநிற வானம் காணும் தூரம் எங்கும் பறந்த, பச்சை நானா புற்போர்வை விரிந்த ஓர் புல் வெளியில் விக்ரம் அமர்ந்திருந்தான். சுமித்ராவும் அவனை கண்டதும் அவன் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.விக்ரம் : எனக்கு நிம்மதியா இருக்கனும்னு தோனுது.. இந்த அமைதியான சூழலில் கூட எனக்கு நிம்மதி கிடைக்க மாட்டீங்குது. காரணம், எப்பவுமே ஒன் சந்தோஷத்தால் மட்டுமே எனக்கு அது கிடைக்கும்..
சுமித்ரா : விக்ரம்.. என் சந்தோஷமும் அதில் தான் தங்கி இருக்கு.. நீ எப்பவும் என் கூடவே இருக்கணும்..
விக்ரம் எழுந்து நின்று,விக்ரம் : நா உன் கூடவே இருக்கனும்னு தான் விரும்புறேன்.. அதுக்காக நான் மட்டும் தான் முயற்சியும் செய்றேன்.. ஆனா நீ அத புரிஞ்சிக்காம பிடிவாதமா இருக்க.
என்று கூறி விட்டு சுமித்ராவின் கையில் ஓர் சிறிய ஈட்டியை வைத்தான். சுமித்ரா அந்த ஈட்டியை கையில் இறுக்கமாக பிடித்துக் கொண்டதும், விக்ரம் அதை பார்த்து புன்னகைத்து விட்டு அங்கிருந்து மறைந்து சென்றான்.. சுமித்ரா, விக்ரம்.. விக்ரம்.. என்று கூவிய படி எழுகையில், கனவு கலைந்து திடுக்கிட்டவளாய் எழுந்து நின்றாள். உடனே தனது கையை பார்த்த போது ஏதும் இருக்கவில்லை. என்னவென்று புரியாத காரணத்தினால் உடனே சிவாவிற்க்கு தொலைபேசியில் அழைத்தாள்.
ESTÁS LEYENDO
மந்த மாருதம் பாகம் 2 ( முடிவுற்றது )
Romanceநம்ம வாழ்க்கைய நாம தான் தீர்மானிக்கனும் அதிகமானோர் சொல்வாங்க. அட நானும் சொல்லிட்டு தான் இருக்கேன். ஆனா நம்ம மேல உயிரே வெச்சவங்க நினைச்சா நாம எதிர்ப்பார்த்தத விட நல்ல வாழ்க்கைய நமக்கு பெற்றுத்தறுவாங்க. அது காதலன் / காதலின்னு நீங்க நினைப்பீங்க... ஆனா...