நோக்கம்

103 9 2
                                    

அஷ்வின் : வைட், நா சிவாகிட்ட க்கோல் பண்ணி நீ என்கூட தான் இருக்கான்னு சொல்லிட்டு இருக்கேன்.. தேடிட்டு இருப்பாங்க..

சுமித்ரா : நா கெம்பஸ்ல இருக்கேன்னு தெரியுமே அவர்க்கு.. எல்லாரும் க்குவாடஸ்ல தான் இருக்காங்க..

அஷ்வின் : தெரியுமா..?? பட் கோல் பண்ணி ஒன்ன காணம், நாங்க கோயில் போறோம்டு சொன்னாங்க.. குவாடஸ்க்கு போனேன்.. பட் இருக்கல்லயே..

சுமித்ரா : காணம்னு சொன்னாங்களா..??!!!
என்று சுமித்ரா அஷ்வினை பார்த்துக் கேட்டதும், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றனர். இது அனைத்தும் அவர்களது நாடகம் என இருவரும் உணர்ந்து கொண்டனர். சுமித்ராவின் கண்ணங்கள் சிவந்தன ; அஷ்வின் கையால் தலைமுடியை கலைத்தபடி மறுபுறம் முகத்தை திருப்பி, வரும் சிரிப்பை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தினான். திடீரென சுமித்ரா வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தாள். அஷ்வினும் அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாது சிரித்தான். இவர்களது சிரிப்புச் சத்தத்தை கேட்டு பல்கலைக்கழக காவலாளி

காவலாளி : யாரு... யாரிருக்கீங்க..??

சுமித்ரா : ஷ்... அஷ்வின் வந்திடு..

அஷ்வின் : வய்.. இங்க வரமுடியாதா..??

சுமித்ரா : ஈவ்னிங் சிக்ஸ்க்கு மேல இங்க வர முடியாது.. குய்க்கா வா..

என்று சுமித்ரா அஷ்வினின் கையை இழுத்துக் கொண்டு அவள் வழமையாக உள்ளே வரும் திருட்டு வழியால் வெளியே ஓடினர்

اوووه! هذه الصورة لا تتبع إرشادات المحتوى الخاصة بنا. لمتابعة النشر، يرجى إزالتها أو تحميل صورة أخرى.

என்று சுமித்ரா அஷ்வினின் கையை இழுத்துக் கொண்டு அவள் வழமையாக உள்ளே வரும் திருட்டு வழியால் வெளியே ஓடினர். விடுதியை நோக்கி ஓடுகையில்..

அஷ்வின் : ஹோல்ட் ஓன்.. ஹோல்ட் ஓன்... கார்..?? நா முன்னாடி கார வெச்சிட்டு வந்தேன்..

மந்த மாருதம்  பாகம் 2 ( முடிவுற்றது )حيث تعيش القصص. اكتشف الآن