சுமங்கலியா...??

226 10 0
                                    


அபி : " சுமித்ரா... நேரமாச்சு.. "

என்று கதவைத் தட்டும் போது அடைக்கப்பட்ட கதவுகள் நிலத்தில் தேய்ந்தபடி திறக்கப்பட்டது. ஆம்.. அன்றுடன் விக்ரம் இறந்து மூன்றாம் ஆண்டு நிறைவு பெறுகிறது . அவனது திதி வழங்களுக்கு மட்டுமே வீட்டிலிருந்து வெளியே வருவாள் சுமித்ரா. அன்றும் வழமை போன்று வெண்ணிற சேலை கட்டி விதவை கோலத்துடன் நின்றாள். சடங்கு சம்பிரதாயம் படி திருமணம் செய்து கொள்ளாத போதிலும் மனதால் வாழ்ந்த காலங்கள் அவளை விதவையாக வேடம் சூட வைத்தது. அவளை அவ்வாறு பார்த்துப் பார்த்து அனைவருக்கும் பழகி விட்டது.
அபியுடன் சுமித்ராவும் திதி வழங்கும் இடத்திற்கு சென்றாள். ஆதி, சிவா மற்றும் சுமித்ராவின் பெற்றோரும் அங்கு திதிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
குறிப்பிட்ட அந்த இடத்திற்கு கார் சென்றடைந்ததும் அங்கிருந்த அனைவரது கவனமும் திறக்கப்படும் கார் கதவின் மீதே விழுந்தது. கொலுசு மணி சத்தம் போன்ற கலகலப்பான சிரிப்பும் மயில் போன்ற அழகும் இவளுக்கு சொந்தமாக இருந்த செல்வமா? என்று ஆச்சரியப்படும் அளவிற்கு அவளது நிலை மாறி விட்டது. உயிருடன் இருப்பதை பாட்போரிற்கு உணர்த்தியது அவளது நடை மட்டுமே. அவளது வருகையைக் கண்டு அனைவரது கண்களும் மீன் போன்று கண்ணீரில் நீந்தின.
திதி வழங்கல் முறைப்படி நிறைவு பெற்றதும் வருடா வருடம் விக்ரம் இறுதியாக சென்ற கோயிலுக்கு செல்வது வழக்கம். அன்றும் அனைவரும் திதி வழங்கல் முடிவடைந்ததும் கோயிலுக்கு சென்றனர். கடவுளை தரிசித்து விட்டு வீடு திரும்புவதற்காக வாயிலை நோக்கி செல்கையில் நடு நடுக்கமான குரலில்

" ஆத்மா சாந்தி அடையவில்லை. ஏய் பெண்ணே.. உன்னால் அவன் ஆத்மா சாந்தி அடையவில்லை. "
என்று கடுமையான தொனியில் ஓர் பெரியவர் கூறினார். அனைவரும் திகைத்து நின்றனர். சுமித்ரா அவரது அருகில் சென்று

" சுவாமி, என்னிடமா சொல்றீங்க?.. "
என்று அமைதியான குரலில் கேட்டாள். உரத்த குரலில் சிரித்து விட்டு

மந்த மாருதம்  பாகம் 2 ( முடிவுற்றது )Onde histórias criam vida. Descubra agora