27. நினைவலைகள்.. 💖

105 7 0
                                    

சரண், விஜய்யின் காதலைப் பற்றிக் கூற கூற மலர் அதிர்ச்சியில் உறைந்துப் போனாள். அதற்கு மேல் சரண் கூறுவதைக் கேட்க முடியாமல் அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

மறுபுறம், சிறப்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த விஜய்க்கு சிகிச்சை நடந்துமுடிந்தது. மலர் நகரவும் அவளை தடுக்க எத்தனித்த சரணை மருத்துவர் அழைத்தார்.

"ஆப்ரேசன் நல்லபடியா முடிஞ்சுது. நீங்க கூட்டிவந்த பேசன்ட் இஸ் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட் நௌ. இப்போ அவர் சரியாகிட்டார். ஆனால், இப்போ அவர் மயக்கத்துல இருப்பார். சாயங்காலம் போல நீங்க அவரப் போய் பார்க்கலாம்." என்றுக் கூறிவிட்டுச் சென்றார்.

டாக்டர் கூறியதில் ஒருபுறம் சந்தோசமாய் இருக்க.. மறுபுறம் அச்சத்தைத் தந்தது சரணுக்கு. 'மலர் கிட்ட அவனோட காதலைப் பத்தி சொன்னது அவனுக்குத் தெரிஞ்சா, என்னைய கொன்றுவானே...!!!' என்று மனதிற்குள் சரண் நினைத்துக் கொண்டிருக்கையிலேயே அவனது யோசனை மலர் பக்கம் சென்றது.

'ஆஹா... இவள் வேற கோபமாகி கிளம்பினாளே! எங்கே இருப்பாள்-னு வேற தெரியலையே?! இந்த விஜய் பயல், கண் முழிச்சதும் அந்த குட்டி சைத்தான் மலர்-அ தானே கேட்பான்? ' என்று எண்ணியவன் மலரைத் தேடி அந்த தளத்தில் அலய, வெகு நேரமாய் இங்கும் அங்குமாக திரியும் சரணைக் கண்ட செவிலியர் ஒருவர்,

"யாரையாச்சும் தேடுரீங்களா சார்?", என்று சரணிடம் கேட்க...

"ஆமாம் சிஸ்டர். ஒரு பொண்ணு.. குட்டியா 5.4 அடி-ல, மெரூன் கலர் சேலைய உடுத்திகிட்டு... " என்று சரண் பேசி முடிக்கும் முன்னே அச்செவிலியர்,

"5.4 அடி உங்களுக்கு குட்டியா? உயரமா இருக்கோம்னு ஆணவத்துல ஆடாதீங்க..." என்று சரண் காதுபடவே பேசிவிட்டு அகன்றார். இதனைக் கேட்ட சரண் தனது இருவிழிகளை விரித்து,

'இது என்னடா எனக்கு வந்த சோதனை...? நான் ஆணவத்துல ஆடுறேனா? எல்லாம் அந்த குட்டி சைத்தானால வந்தது.' என்று எண்ணியப்படி தனது மொபைலை எடுத்து நோண்ட... சரணின் நாசிக்கு உணவு மணம் எட்டியது.

😍பூர்வ ஜென்ம பந்தம்😍Where stories live. Discover now