பாண்டிசாமி எனும் மிருதன்
மலர் தனது நரக வாழ்க்கையைப் பற்றி கூற கூற விஜயின் கண்களிலிருந்து கண்ணீர் தாரைதாரையாக கொட்டியது. அவனது மனமுமோ உயிர் வதை வலியை அனுபவித்தது.
" நீ போன அப்பறம் எங்கள் வீட்ல எனக்கு திருமணம் செஞ்சு வச்சாங்க. பாண்டி சாமிக்கு தான்... ஆனால், அவன் எங்கள் அம்மா-அப்பா நினைச்ச அளவுக்கு நல்லவன் கிடையாது. என்னைய காலம் பூரா நல்லா பார்த்துக்குவான்னு நினைச்சு தான் அவனை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க. ஆனால், அவன் சரியான பொம்பள பொறுக்கி... சந்தேகப் பிராணி வேற! என்ன செஞ்சாலும் சந்தேகப்படுவான். சந்தேகப் பிராணினா, நான் 'அவனைப் பார்ப்பேன், இவனைப் பார்ப்பேன்' னு எல்லாம் நினைக்க மாட்டான். அவன் என்னை யார் பார்த்தாலும், அவனோட சேர்ந்து வச்சு அசிங்கமா பேசுவான். சினிமால வர்ற ஒரு காதல் பாடலை கூட என்னால வாய் விட்டு பாட முடியாது. ' எவன நினைச்சு பாடுற?' னு அசிங்கமா கேட்பான். உனக்கே தெரியும். எனக்கு கை நிறைய கண்ணாடி வளையல் போடணும்னு ரொம்ப ஆசை. அப்படி ஒரு நாள் நான் கை நிறைய கண்ணாடி வளையல் போட்டுட்டு இருக்கும்போது அவன் என்னை பார்த்து என்ன கேட்டான் தெரியுமா?" என்று மலர் தனக்கு வந்த அழுகையை, தொண்டைக் குளியல் அடக்கி வைத்து, தம் கட்டியபடி கண்களில் தேங்கியிருந்த கண்ணீரோடு விஜயை நோக்கிக் கேட்டாள்.
' என்ன கேட்டான்?' என்று கேட்பதற்கே விஜய்க்கு பயமாக இருந்தது. இருந்தாலும் அதையும் மீறி அக்கேள்வியை மலரிடம் கேட்டான் அவன். அதற்கு மலரோ,
" 'பொண்ணுங்களுக்கு பொதுவாகவே முதலிரவு ஆசை அதிகமாக இருக்குமாம். அதை இப்படி கண்ணாடி வளையல் போட்டு தான் வெளியே காட்டுவாங்களாம். உன்னோட இந்த முதலிரவு ஆசைய எனக்கு உணர்த்த நினைக்கலனு எனக்கு நல்லாவே தெரியும். ஏன்னா, உன்னோட "அந்த" ஆசையை என்னால நிறைவேத்த முடியாது. அது உனக்கு நல்லாவே தெரியும். அதனால நீ வேற யாருக்கோ உனக்கு "அந்த" ஆசை இருக்குன்னு காட்டுற. சொல்லு எவனுக்கு உன்னோட "அந்த" ஆசைய வெளிகாட்டுற?' னு மூஞ்சிய கேவலமா வச்சுக்கிட்டு எவ்வளவு பச்சை பச்சையா கேட்டான் தெரியுமா?" என்று மலர் கூறிக் கொண்டிருக்கும் போதே அவளது குரல் மனவலியில் நடுங்கியது. விஜயோ அதை கேட்க இயலாமல் காதுகளை பொத்திக்கொண்டான்.
YOU ARE READING
😍பூர்வ ஜென்ம பந்தம்😍
Fiction Historiqueமறு ஜென்மம் என்பது உண்மையா? "ஆம் உண்மை தான்" என்று உணர்த்தப்போகிறது இக்கதை. வாருங்கள்.. கதைக்குள் போகலாம்..