21. அவர்...!!! 😍

243 28 90
                                    

பாண்டிசாமி சென்னை வந்து இறங்கினான். நேராக தன் வீட்டிற்கு (மாமனார் வீடு), சென்றான். இங்கு மலரோ,நடப்பது யாதாகினும் அதற்குரிய மனோதிடத்தினை வரவழைத்துக்கொண்டாள். வீட்டிற்கு வந்த பாண்டி, மலர் சமையலுக்கு ஆயத்தம் செய்வதை கவனித்தான். பின் குளித்து விட்டு வந்தவன், மீண்டும் மலர் என்ன செய்கிறாள் என்று பார்த்தான். அந்த நேரத்தில் அவள், டிவியில் ஓடிக்கொண்டிருந்த பாடலை ரசித்தப்படி காய்களை வெட்டிக்கொண்டிருந்தாள். மலரின் அருகில் அமர்ந்த பாண்டி, டிவியில் என்ன பாடல் ஓடுகிறது என்று பார்த்தான்.. அதில் ஒரு காதல் பாடல் ஓடிக்கொண்டிருப்பதை கவனித்த பாண்டி, மலரின் பக்கம் தன் கண்ணைத் திருப்பினான். மலரோ தன்னை மறந்தவளாய் அப்பாடலை முகத்தில் சிரிப்புடன் முனுமுனுத்துக் கொண்டிருந்தாள்.

"என்ன பாட்டெல்லாம் பலமா இருக்கு?" என்று யோசனையான பார்வையுடன் மலரிடம் பாண்ட கேட்க.. அதற்கு மலரோ அப்பாவியாக..

"இல்லைங்க.. இந்த பாடல் எனக்கு ரொம்ம்ம்ம்பபப பிடிக்கும்." என்று முகமலர்ச்சியுடன் கூறினாள்.

"ஓஓஓஓஓ...." என்று இழுத்தவன் ஒரு கொடிய முகப்பாவனையுடன் மலரை நோக்கி.."எவனுக்காக இந்த பாடலை பாடுற? இல்லைனா, எவன நினச்சு இந்த பாட்டு?" என்று கேவலமான சிரிப்புடன் அவன் கேட்ட விதத்தில் மலருக்கு 'ச்சீ' என்றானது.. மனது வலித்தாலும், இவனுடைய இத்தகைய பேச்சுகளைப் பொறுக்க இயலாதவளாய் நெருப்பாக பொறிந்தாள்..

"உங்களுக்கு என்னைய போல நல்லவ கிடச்சுருக்க கூடாது.. உங்கள மாதிரி ஈத்தரை புத்தி உடைய பெண் தான் கிடச்சுருக்கணும்.." என்று பொறிந்து தள்ளிவிட்டு அவன் பதிலை எதிர்பாராமல் அடுப்பறைக்கு விரைந்தாள். மலரின் இத்தகைய பேச்சினை சிறிதும் எதிர்பாராத பாண்டிசாமி, 'கப்சிப்' என்று வாயை மூடிக்கொண்டான்.

காலை நேரத்தில் டிவி-யவோ, செய்தித்தாளையோ பார்த்துக்கொண்டிருப்பவன், மதியம் 3 மணி ஆனால், எங்கேனும் வெளியில் சென்றுவிடுவான். அப்படி போய் வீடு திரும்ப சாயங்காலம் 7 மணி ஆகிவிடும். இவன் எங்கே செல்கிறான்? எதற்கு செல்கிறான்? என்பது யாருக்கும் தெரியாது. மலரும் இதைப் பற்றி கேட்பதில்லை. அப்படி கேட்டால், அவனின் கேவலமான பேச்சிற்கு ஆளாகிவிடும் நிலைமை அவளுக்கு ஏற்பட்டுவிடும் என்ற காரணத்தினால், இதை பற்றி மலர் எதுவும் கேட்கமாட்டாள்.

😍பூர்வ ஜென்ம பந்தம்😍Where stories live. Discover now