"மலர்... உங்கிட்ட தனியா பேசணும்..." என்று விஜய் கூறவும், மலர் தனியாக விஜய்யுடன் வெளிய வந்தாள்.
"ஹான்.. சொல்லு விஜய்." என்று மலர் கேட்கவும் விஜய்க்கு மூச்சே நின்றுவிடும் போல இருந்தது.. தம் கட்டி தம் கட்டி பேச்சு வராமல் நின்றுக்கொண்டிருந்தான்...
"விஜய்... calm down.. என்ன விஷயம் சொல்லு.."
"அது......" என்று பேசிக்கொண்டிருக்கும்போதே தன் காலுக்கடியில் பூமி சூழல்வது போல உணர்ந்தவனுக்கு சில வினாடிகளிலேயே எதிரிலிருக்கும் அனைத்தும் மங்கலாக தெரிய.. அப்படியே மயங்கி சரிந்தான் விஜய்.
கண்களை விழித்தவனுக்கு எதிரே சரண் நின்றுக்கொண்டிருந்தான். பட்டென்று எழுந்து அமர்ந்தவன், தான் எங்கு இருக்கிறோம் என்பது புரியாமல் விழிக்க... சரணிடம்,
"சரண்.. நான், எங்க இருக்கேன் டா இப்போ? மலர்..எங்கே..?" என்று பதட்டமானான்.
"அந்த பொண்ணு பேரு தான் மலரா? யாருடா அவ? உனக்கு அவள எப்படி தெரியும்?" என்று புருவங்களில் முடிச்சுவிழ, விஜய்யிடம், சீரியஸாக கேட்டான் சரண்.
சரணிடம் மலரை பற்றி ஒரு வார்த்தைக்கூட கூறாதது நினைவுக்கு வர, தான் உளறிவிட்டதை உணர்ந்தான்.
'ஆஹா.. இப்படி உளறிட்டேனே... சே...' என்றபடி விழிகளை உருட்டியவன், எப்படியேணும் தன் காதல் விசயம்,சரணுக்கு தெரியக்கூடாது என்பதில் முடிவாய் இருந்த விஜய்.. சமாளிக்கும் எண்ணத்தில்....
"ஆங்.. ஆங்.. ஹான்.. மலர் மலர்.. ஆமா. அவ தான் மலரா? ஆமா மச்சா... அந்த பொண்ணு ஏதோ பேச வந்துச்சு. அப்போ தான் அவ பெயரே எனக்கு தெரிஞ்சுச்சு. அப்பறம் என்னாச்சுனு தெரியல. இப்போ இங்க இருக்கேன். இது என்ன இடம்னு மொதல்ல சொல்லு மச்சா.." என்று சுத்திமுத்தி பார்வையை துளாவவிட்டவனிடம்..
"இது ஹாஸ்பிட்டல் விஜய்" என்று சற்று கடிமான குரலில் பதிலளித்த சரணுக்கு, விஜய்யின் மழுப்பல் நன்கு விளங்கியது. சரணின் குரல் மாற்றத்தை உணரந்த விஜய், அவனை திரும்பி பார்க்க.. கைகளைக் கட்டிக்கொண்டு, விஜய்யின் கண்களை தீர்க்கமாக பார்த்துக்கொண்டிருர்தான் சரண்.
YOU ARE READING
😍பூர்வ ஜென்ம பந்தம்😍
Historyczneமறு ஜென்மம் என்பது உண்மையா? "ஆம் உண்மை தான்" என்று உணர்த்தப்போகிறது இக்கதை. வாருங்கள்.. கதைக்குள் போகலாம்..