மறுநாள் காலை விஜய்க்கு இருப்பு கொள்ளவில்லை... ஒரு இடத்தில் உட்காராமல் இங்கும் அங்கும் உலாத்திக்கொண்டிருந்தான். விஜய்யின் அம்மா, சுபாஷினி..
" விஜய்.. ஆபீஸ் போகலையா டா இன்னைக்கு? "
"இல்ல ம்மா.. ஆபீஸ் போகல." என்று புன்னகைத்தபடி கூறினான்.
"ஏன் டா? அந்த கனவ நினச்சு குழம்பிட்டு இருக்கியா?" என்று கவலையுடன் அவர் கேட்க..
"இல்ல ம்மா.. அது இல்ல."
"பின்ன என்ன டா தம்பி?"
"அடடடடடா... ஆபீஸ் போகாதது ஒரு குற்றமா..?" என்று தலையில் கை வைத்துக்கொண்டு சிரிக்க..
"எப்பவும் ஆபீஸுக்கு லீவ் போடாம போகுற பிள்ள.. லீவ் எடுத்து வீட்டுல உட்கார்ந்திருக்கே-னு கேட்டேன் டா. போ.. நீ ஒன்னும் சொல்ல வேணா.. நீயாச்சு... உன் ஆபீஸாச்சு... அந்த தாஸ்-ஆச்சு..'' என்று சுபா பொய் கோபத்துடன் முகத்தை திருப்பிக்கொள்ள..
"அச்சச்சோ.. என் செல்ல்ல்ல்ல.. அம்மா கோபம் ஆயிட்டீங்களா?? ஸாரி ஸாரி... வேணும்னா ரெண்டு அடி அடிச்சுக்கோங்க.." என்றவன், சுபாவின் கைகளை பிடித்து தன்னை அடிக்க வைக்க முயல..
"டேய் போ டா.. உன்மேல கோபப்பட்டு என்ன செய்ய போறேன்..?" என்று மகனை ஆரத்தழுவிக் கொண்டார்.
"நான் இன்னைக்கு சரண் கூட வெளிய போறேன். அதான், ஆபீஸ் போகல.." என்று தாயிடம், லீவ் எடுத்ததற்கான காரணத்தை கூறினான் விஜய்.
"சரி டா..பத்திரமா போயிட்டு வாங்க. எப்போ கிளம்புறீங்க..?"
"3 மணிக்கு கிளம்பணும் ம்மா."
"சரி டா கண்ணா." என்றவர், போன் ஏதோ வர.. அதை எடுக்க விரைந்தார்.
சுபா, செல்வதையே பார்த்தவன்.. கை கடிகாரத்தைப் பார்த்தான்.
"இறைவா.. மணி இப்போ தான் 11 ஆகுதே.. இன்னும் 4 மணி நேரம் இருக்கே...!! " என்று வாட்சைப் பார்த்து பார்த்து நடந்தான்.
கடிகாரம்.. மணி 2 என்றது. விஜய் பரபரப்பாக இருந்தான். 'என்ன டிரஸ் அணியலாம்?' என்று cupboard-ஐ திறந்துப் பார்த்தான். அப்பொழுது சுபா,
YOU ARE READING
😍பூர்வ ஜென்ம பந்தம்😍
Historyczneமறு ஜென்மம் என்பது உண்மையா? "ஆம் உண்மை தான்" என்று உணர்த்தப்போகிறது இக்கதை. வாருங்கள்.. கதைக்குள் போகலாம்..