22. அழியா காதல்..😍

345 23 177
                                    

மலர், விஜய்யைப் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே விஜய்யின் முகம், ஒரு சக்கரவர்த்தியின் முகமாக மலரின் கண்களுக்குத் தெரிந்தது..

"பிரபு..... தாங்களா??? நீங்கள் என்னைக் காப்பாற்ற வருவீர்கள் என்பதை நான் அறிவேன்... என் மீதான தங்களது அன்பு என்றைக்கும் மாறாது என்பதை இப்பேதை நன்கு அறிவாள் பிரபு.." என்றபடி மயங்கிவிட்டாள் மலர்.

"மலர்.. மலர்..." என்று மலரின் முகத்தை லேசாக தட்டியவன், தன் அருகில் நின்றுகொண்டிருந்த சரணை அழைத்தான்.

"சரண்.. மலரை ஆஸ்பித்திரிக்கு கூட்டிட்டு போவோம் வா." என்றபடி மலரை தூக்கிக்கொண்டு தன் காரில் ஏற்றினான் விஜய். காரின் பின் பக்கம் ஏறிய விஜய், மலரின் தலையை தன் மடியில் வைத்தபடி கண் கலங்கினான்.

'நீ.. என்னைய திருமணம் செஞ்சுக்கணும்-னு ஆசைப்பட்டேன். அது தான் நடக்கல. சரி, நீயாவது ஒரு நல்ல மனுஷன கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கணும்னு ஆசைப்பட்டேன் மலர். ஆனா.... நீ...? ஹய்யோ..' என்று பொங்கிவந்த கண்ணீரை, தன் முகத்தை மேலே நிமிர்த்தி மூச்சை உள் இழுத்துக்கொண்டு அடக்கிக்கொண்டான் விஜய்.
மயக்கத்தில் இருந்த மலருக்கு ஏதேதோ நிழற் உருவங்கள் வந்து போயின.. சற்று நேரத்தில் எல்லா உருவங்களும் தெளிவாயின...

இப்போது மலரின் கண்களுக்கு தெரிவது, ஏதோ ஒரு சிவனடியாரின் மண்டபம்.. அங்கிருந்த மேடையில் இரு ஆடவர்கள் அமர்ந்திருந்தனர்.. ஒருவர், தலையில் திருநீர் பட்டை தீட்டி... கழுத்து-கை-கால்களில் ருத்திராட்ச மாலை அணிந்திருந்தார். அவரின் உருவம் தெரிந்ததும், மலரின் ஆழ் மனது....

'திருநாவுக்கரசர் பெருமான்...' என்று கூறியது.. நாவுக்கரசப் பெருமானின் அருகிலிருப்பவரைக் கண்ட மலர்...

'ஆ.. அப்பா.. என் அப்பா..!! ஆயனர்.. பிரபல சிற்பி ஆயனர்...' என்று நினைத்தவளுட்கு தாமே, அங்கே நடனமாடுவது போலத் தோன்றியது.

ஆம்.. அங்கு பரதம் ஆடிக்கொண்டிருந்தது, காஞ்சி மாநகர்த்தின் தலைசிறந்த நடனமங்கை.. காஞ்சி மாநகரின் கலைப் பெருமையான சிவகாமியான நம் மலர் தான்.

😍பூர்வ ஜென்ம பந்தம்😍Where stories live. Discover now