33. ஓர் நொடி சந்தோசம் ✨

6 0 0
                                    

ஓர் நொடி சந்தோசம்

கதிரவனின் செங்கதிர்கள் வானமெங்கும் பறந்து விரிந்துக்கிடக்க.... நீல வானம்,  செவ்வானமாய் காட்சியளித்துக்கொண்டிருந்தது.

திரைச்சீலை விலக, அதிகாலை சூரிய வெளிச்சம் தன் முகத்தில் படவும், மெல்ல மெல்ல கண் விழித்தாள் மலர்.

ஓரளவிற்கு தூக்கம் கலைந்திருந்தவளின் நினைவெல்லாம், முந்தைய நாள் இரவில்,  தன் கண்முன்னே வந்து காற்றில் மிதந்த வண்ணம் நின்றுக்கொண்டிருந்த இரண்டு கரிய உருவங்கள் தான்!

பதறியடித்துக்கொண்டு எழுந்தமர்ந்தவள்,  அப்போது தான், தான் அவ்வளவு நேரம் சயனித்திருந்த மிருதுவான மெத்தையை கவனித்தாள்.

'நான் எப்படி இங்கே வந்தேன்?' என்று யோசித்த மலர், தனக்கு வலப்பக்கமாய், கையில் காபி கோப்பையுடன் தன்னை நோக்கி நடந்துவந்துக்கொண்டிருந்த விஜயைக் கண்டு ஒரு கணம் தூக்கிவாறி போட...

"கூல்!!!  கூல்!!! ஹியர்!!! ஹேவ் திஸ் காஃபி ஃபர்ஸ்ட்..." என்று நுனி நாக்கில் ஆங்கிலம் தவள பேசியவனை இமைக்காமல் 'ஆ' வென்று வாயைத் திறந்தபடி பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.

அவளைக் கண்டவனுக்கு லேசாய் சிரிப்பு வர, 'களுக்' என்று சிரித்தவன்... அவளது முகத்தின் முன்னே சொடுக்கிட்டு,

"என்...ன?" என்று தோளைக் குலக்கியபடி, கை இரண்டையும் விரித்த நிலையில் விஜய் புன்னகையுடன் வினவ...

"நான்...  நான்..... நான்... " என்று வார்த்தை வராமல்,  மலரின் நாக்கு தாண்டவம் ஆடியது.

"என்ன? பசிக்குதா? குட்டி பசியா? இல்லை பெரிய பசியா? 'நான் நான்' னு இத்தனை நான் வாயிலையே சுடுற?" என்று வட இந்திய உணவான 'நாண்' பற்றி கிண்டலாய் கேட்ட விஜயிடம்,

"இல்லை! நான்..... நான்....... எப்படி......." என்று மீண்டும் வார்த்தை வராமல் மலர் திணறிக்கொண்டிருக்க...

"எப்படி நாண்  வேண்டும்னு பதம் சொல்ல போறியா? அதெல்லாம் வேண்டாம். நம்ம சமையல் அண்ணாவே நல்ல பதத்துல தான் செஞ்சுத் தருவார். நீ என்ன வகை நாண் வேண்டும்னு மட்டும் சொன்னால் போதும்.  சமையல் அண்ணா தூள் கிளப்பிடுவாரு... சொல்லு! என்ன நாண் வேண்டும்? பட்டர் நாண்-ஆ? இல்ல கேஷ்மீரி நாண்-ஆ? சொல்லு! சொல்லு!  சொல்லு!!! சொல்லு மா.....!" என்று கடகடவென பேசிமுடித்தான் விஜய்.

😍பூர்வ ஜென்ம பந்தம்😍Where stories live. Discover now