18. ஒரு வருடம்💗

248 25 165
                                    

அடுத்த நாள் class-ல் பாடத்தை கவனித்துக்கொண்டிருந்த மலர்க்கு..விஜய்யின் ஞாபகம் வரவே, கண்களை மூடிக்கொண்டாள்.

'பாடத்தை கவனி மலர்...', என்று தனக்கு தானே கூறியவள், ஜன்னலோரம் பார்த்தாள். வெளியே விஜய் நின்றிருப்பது போல் தோன்ற.. கண்களைக் கசக்கிக்கொண்டு மீண்டும் பார்த்தாள். ஆம்... விஜய் அங்கே கட்டிட வேலையில் மும்முரமாக ஈடுப்பட்டுக்கொண்டிருந்தான். அவனைக் கண்ட குஷியில், மலர் அவனுக்கு கைகாட்டவே.. அதனை கவனித்த professor,

"மலர்... கிளாஸ்-ஸ விட்டு வெளிய போ..." என்று கடிந்தார். அதன்படி கிளாஸைவிட்டு வெளியே வந்தவள், அப்படியே படியிறங்கி வெளியே இருந்த விஜய்யிடம் சென்றாள்.

"ஹேய் விஜய்....!!" என்று கைகாட்டியபடி மலர், அவனிடம் சென்றாள். அவளைக்கண்ட விஜய்யின் கண்கள் சந்தோஷத்தில் மிளிர்ந்தது..

"மலர்.........!!!!! " என்றவனின் குரலில் ஆனந்தமும், மலரின் மீது அவன் கொண்ட அளவுக்கடந்த காதலும் தெரிந்தது.

" என்ன இங்க?" என்று மலர் சிறு புன்னகையுடன் கேட்க..

"இங்க எனக்கு சைட் வொர்க் இருக்கு டா.. அதான் வந்தேன். இப்போ உனக்கு கிளாஸ் இல்லையா? இங்க வந்து நிக்குற? "

"அத ஏன் பா கேக்குற..? அதோ பாரு...... அதான் எங்க கிளாஸ் ரூம்." என்று அவள் சுட்டிக்காட்டிய திசையில் விஜய் பார்க்க.. மலரின் கிளாஸ் ஜன்னல் தெரிந்தது.

"ஓ... அதான் உன் கிளாஸ்-ஸா? சரி அதுக்கும், நீ இப்போ இங்க நிக்கிறதுக்கும் என்ன சம்மந்தம்...?"

"எங்க கிளாஸ் ஜன்னல் வழியா பார்த்தப்போ நீ தெரிஞ்ச பா. 'ஹாய்' சொன்னேனா, மேம் பார்த்துட்டு வெளிய அனுப்பிட்டாங்க. அதான் வந்துட்டேன்." என்று தன் நுனி நாக்கை, லேசாக பல்லால் கடித்தபடி சிரிக்க... மலரின் தலையை மெதுவாக..விளையாட்டாக, அடித்தபடி...

"லூசு..." என்று விஜய் சிரிக்க..

மலர், "ஹேய் எதுக்கு என் தலைய தள்ளிவிட்ட..? லூசு-னு வேற சொல்லுற? நீ தான் லூசு. முழு லூசு." என்று பொறிந்து தள்ளினாள்.

😍பூர்வ ஜென்ம பந்தம்😍Where stories live. Discover now