1.GM

825 56 49
                                    

30 வருடங்களுக்கு முன்..

'பரன் கன்ஸ்டரக்சன்ஸ்' (Bharan constructions).. அது சென்னையில் மிக பிரபலமான கட்டிட நிறுவனம்.. 

"எல்லோரும் இங்கே கவனிங்க. நம் ஓனரோட ஒரே மகன்.. தன்னோட மேற்படிப்பை முடிச்சுட்டு இன்னைக்கு நம்ம அலுவலகத்துக்கு முதல் தடவை வரார். சரியாக 11 மணிக்கு இங்கே இருப்பார். இப்போ மணி 10.30.. அவர் வரும் நேரத்தில சேட்டை, அரட்டை-னு அவர டிஸ்டர்ப் பண்ணுற மாதிரி எதுவும் பண்ணிடாதிங்க." என்று சீஃப் என்ஜீனியர் (chief engineer) லோகநாதன் தன்னுடைய staff-களிடம் அறிவுறுத்திக் கொண்டிருந்தார்.

"சாரோட பெயர்?" என்று ஒரு பெண் staff கேட்க..

"நம் அலுவலகமே அவர் பெயரில் தான் ம்மா இயங்கி வருது.." என்றார் லோகநாதன் சற்று கேலியாக...

"அப்போ அவர் பெயர் பரன்-ஆ?" என்று மற்றோரு staff கேட்க...

அதற்கு பதில் வேறு திசையில் கேட்டது..

"ஸ்ரீபரன்.." என்று அக்கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக ஓர் கம்பீரக் குரல் கேட்டது.

"சின்னவர் வந்துட்டாரு.." என்ற வண்ணம் லோகநாதன், ஸ்ரீபரனிடம் சென்று அவனை மிகவும் மரியாதையாக வரவேற்றார்..

" வாங்க சார்.. பெரியவர் உள்ளே ஒரு வேலையாக இருக்கார். அது வரைக்கும் நீங்க GM அறையில் உட்காருங்க." என்ற லோகநாதனின் குரலில் பணிவு தெரிந்தது. இருவரும் GM அறைக்கு சென்றனர்.

லோகநாதன் அந்நிறுவனத்தில் பதினைந்து வருடத்திற்கு மேல் வேலை பார்க்கும் ஓரு நேர்மையான பொறியாளர். ஸ்ரீபரனிற்கு 10 வயதிலிருந்தே அவரை நன்கு தெரியும்.. இருவரும் நெருங்கி பழகினர். 'மேற்படிப்பிற்காக வெளியூர் சென்றவன், நமக்கு எங்கே மரியாதை தரப்போகிறான்? நம்மலையும் ஒரு சாதாரண அலுவலகத்தினராக தான் பார்ப்பான்' என்ற எண்ணத்தில் அவனை மிக மரியாதையோடும், பணிவோடும் பேசிக்கொண்டிருக்கும் லோகநாதனை பார்த்து..

😍பூர்வ ஜென்ம பந்தம்😍Where stories live. Discover now