25. அசுரனின் அழிவு

427 24 36
                                    

"கட்டுன பொண்டாட்டிய வேவு பாக்குறியே..? வெக்கமா இல்ல?" என்று விஜய் ஆத்திரமாக கேட்க..

"இல்ல.."என்று கூறிவிட்டு மலரை தரதரவென்று இழுத்துக்கொண்டு போனான் பாண்டிசாமி.

அதுவரை பொறுமையாக இருந்த விஜய், மலரின் கைகளை இறுக பற்றியிருந்த பாண்டிசாமியின் கையை பிடித்தான்..

"அவ கைய்ய்யயய விடு..." என்று பற்களை கடித்துக் கொண்டு விஜய் கூற.. பாண்டிசாமி, விஜய்யின் கையை உதறிவிட்டு..மலரை இழுத்துக்கொண்டு செல்ல.. மலரோ,

"என்னைய விடுங்க.. நீங்க எனக்கு புருஷனா நடந்துக்கிட்டதே இல்ல.. ஒரு நாளாவது, நான் சாப்பிட்டுருக்கேனா-னு கேட்டுருக்கீங்களா? அட.. அது கூட விடுங்க. அன்னைக்கு எனக்கு அவ்வளவு காய்ச்சல். சோர்ந்து சோர்ந்து திரிஞ்சேன் அன்னைக்கு. 'என்ன பண்ணுது?'-னாவது கேட்டீங்களா? இல்லையே..!! இப்போ மட்டும் எந்த உரிமைல என்னைய இழுத்துட்டு போறீங்க?" என்று மலர், பாண்டியின் கையை உதறியபடி கேட்க.. அவனோ,

"ஓஹோ... நான் புருஷனா நடந்துக்கலையா..? ஆமா..ஆமா.. கரெக்ட் தான்.. நான் புருஷனா நடந்துக்கல. அப்போ, இதோ நிக்குறானே..விஜய்..! இவன் உனக்கு புருஷனா நடந்துக்கிட்டானா?" என்று பாண்டிசாமி தனது கேவல புத்தியை காட்ட..

"ச்சீ.. அசிங்கமா பேசாதீங்க.. என்னைய என்ன உங்கள மாதிரி நினச்சீங்களா? 'அந்த' மாதிரி பெண்கள் வீட்டுக்கு போய் அசிங்கம் பண்ணுறவர் தானே நீங்க..? அதான் என்னையவும் உங்கள மாதிரி அசிங்கம் பண்ணுறவள்-னு நினச்சுட்டீங்க. அது மட்டுமில்லாம, நம்ம போயிருந்த ஒரு கல்யாண வீட்டுல, அன்னைக்கு ராத்திரி நாங்க பொம்பளைங்களா ஒன்னா படுத்து தூங்கிட்டு இருந்தோம்... நான் தூக்கம் வராம, சும்மா கண்ண மூடி படுத்துருந்தேன். நான் நல்லா தூங்கிட்டேன்-னு நினச்சு, நீங்க எந்திருச்சு வந்து.. என் பக்கத்துல தூங்கிட்டு இருந்த பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்க பாத்தீங்க.. நான் எந்திருச்சு உக்காந்ததும் விறுவிறுனு ஓடிப் போய், அம்பளைங்க பக்கம், நீங்க படுத்திருந்த இடத்துலப் போய் படுத்துக்கிட்டீங்க.. அன்னைக்கு மட்டும் நான் எந்திரிக்காம இருந்திருந்தா.......?" என்று மலருக்கு பேச முடியாமல் தொண்டை அடைக்க..

😍பூர்வ ஜென்ம பந்தம்😍Where stories live. Discover now