20. மாற்றங்கள்..🍃

278 25 44
                                    

மலரின் ஒரு கால்-காக, போனின் அருகிலேயே, காலையிலிருந்து அமர்ந்திருந்த தன் நண்பனை கவலையுடன் பார்த்தான் சரண்..

'அந்த பொண்ணு பேசுனத பாத்தா, இவன லவ் பண்ண மாதிரியே தெரியலையே.. இவன் இன்னும் கண்மூடித் தனமாக இருக்கானே..' என்று கவலைப்பட்ட சரண், விஜய்யின் தோளின் மீது ஆறுதலாக கை வைத்தான்..

"விஜய்...." என்று சரண் மிக மெல்லிய குரலில் அழைத்ததில், அவனை நோக்கிய விஜய்,

"என்ன டா..?" என்று வினவினான்.

"Flight-க்கு டைம் ஆயிடுச்சு விஜய். வா. கிளம்புவோம்..." என்று பெட்டியை தூக்கி..மெத்தையின் மீது வைத்தபடி சரண் கூற.. கண்களில் நீர் வழிய விஜய், சரணிடம்..

"என் காதலுக்கு கிடைக்குற கடைசி நிமிடம் டா இது.. இன்னும் ஐந்து நிமிடம் பார்ப்போம் டா. ப்ளீஸ்..." என்றவனின் நடுங்கிய குரலில் சரணுக்கும் அழுகை வர.. விஜய்யின் அருகில் அமர்ந்து, தன் முகத்தை இருகைகளாலும் மூடிக்கொண்டான். ஒரு மணி நேரத்திற்கு பிறகு, கால் வர.. அதனை எடுத்த விஜய்,

"ஹலோ.. ஹலோ... மலர்.. என்ன மலர்.. சொல்லு... நான் விஜய் தான். மலர்.. ஹலோ..ஹலோ.." என்று அவசர அவசரமாக பேசியவனின் மறுமுனையில்..

"ஹலோ.. சார். நீங்க ரூம் காலி செய்யும் நேரம் ஆயிடுச்சு. இதுக்கு அப்பறம் நீங்க தங்குற பத்து நிமிஷமும் இரண்டாவது நாள் கணக்குல சேர்த்துப்போம் சார். உங்களுக்கு ஞாபகப்படுத்த தான் சார் இந்த கால். தேங்க் யூ" என்று அந்த ஹோட்டல் ரிசப்சனிஸ்ட் கூறியதை கேட்ட விஜய், எதுவும் கூறாமல், போனை வெறுமையில் கீழே வைத்தான். இதனைக் கண்ட சரண்,

"விஜய்.. போன்-ல யாரு டா? மலரா? என்ன சொன்னாங்க?" என்று சரண், தன் நண்பனின் காதல் கைகூடப்போகிறது என்ற எண்ணத்தில் குதூகலிக்க, விஜய்யோ..

"ஹோட்டல் ரிசப்பனிஸ்ட் டா. ரூம்-அ vacate பண்ண சொல்லுறாங்க." என்றவனின் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லை. மறுவார்த்தை எதுவும் கூறாமல் பெட்டியை எடுத்துக்கொண்டு விறுவிறுவென நடந்த விஜய்யை பார்த்த சரண்..

😍பூர்வ ஜென்ம பந்தம்😍Where stories live. Discover now