மாமல்லபுரத்தில் சில மணி நேரங்கள் செலவளித்த ஸ்ரீபரன், நிறைமதி மற்றும் புலிவேந்தன்.. அங்கே பொங்கித் தவழும் கடல் அலையை ரசித்தப்படி அமர்ந்திருந்தனர். கடல்-ஐ கண்டதும் நிறைமதிக்கு இருப்புக்கொள்ளவில்லை. 'பொறுத்தது போதும் பொங்கி எழு நிறைமதி..!' என்று தன் மனதிற்குள் கூறிவிட்டு... ஸ்ரீபரனின் அருகில் அமர்ந்திருந்தவள், சட்டென்று துள்ளி எழுந்தாள். அவள் இப்படி எழுந்தவிதத்தில், அருகில் அமர்ந்திருந்த ஸ்ரீபரனின் கண்களில் மண் துகள்கள் பட்டன.. மண், கண்களில் விழுந்ததும் ஸ்ரீபரன்,
"ஸ்....!! " என்று கை விரலை, தன் கண்ணுக்கு கொண்டு சென்றவனைக் கண்டு பதட்டம் அடைந்தாள்.
"ஹய்யோ.. பரன்..! என்ன ஆச்சு..?" என்றபடி முட்டி போட்டு, அவன் அருகில் அமர்ந்தவாறு கேட்டாள் நிறைமதி.
"ஆங்... மண்ணா போச்சு.." என்று முறைத்தப்படி புலிவேந்தன் கூற..
"உங்கள நான் கேட்கலை.." என்றவள்,
'எப்ப பாரு.. வாயை திறந்தாலே அபசகுனமா பேசுறது..' என்று புலிவேந்தனை வாயில் மென்று துப்பவது போல், தனக்கு மட்டும் கேட்கும் வகையில் அவனை பொறுமினாள். ஸ்ரீபரன் தன் கண்ணை கசக்க முயல,
"பரன்.. அப்படி செய்யாதீங்க.. இருங்க. தண்ணீர் கொண்டு வரேன். கண்ணை கழுவினால், சரியாகிடும்." என்றவள், தன் கைப்பையில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து ஸ்ரீபரனின் கண்களை கழுவி விட்டாள். அப்படி செய்தும், ஸ்ரீபரனால் கண்களை திறக்க முடியவில்லை என்றதும், தன் டிபன் பாக்ஸில் இருந்த சாப்பாட்டை, அங்கு பிச்சைக் கேட்டு வந்த பெண்ணிடம் கொடுத்து, டிபன் பாக்ஸை காலி செய்தாள். அதனை நன்கு கழுவி, அதில் தண்ணீரை நிரப்பி... ஸ்ரீபரனிடம் வந்தாள்.
"பரன்.... உங்கள் கண்ணை இந்த தண்ணீரில் விட்டு, கண்ணை, திறந்து முடுங்க." என்று தன் டிபன் பாக்ஸில் இருந்த தண்ணீரை நீட்டினாள். 'இது என்ன டிபன் பாக்ஸ்?' என்று மனதில் தோன்றினாலும் கண்கள் எ
உறுத்தவே, அவள் கூறியப்படி செய்ய, அந்த டிபன் பாக்ஸை வாங்கினான் ஸ்ரீபரன். அதனைக் கண்ட புலிவேந்தன்,
YOU ARE READING
😍பூர்வ ஜென்ம பந்தம்😍
Historical Fictionமறு ஜென்மம் என்பது உண்மையா? "ஆம் உண்மை தான்" என்று உணர்த்தப்போகிறது இக்கதை. வாருங்கள்.. கதைக்குள் போகலாம்..