மும்பையிலிருக்கும் அந்த பிரபல கம்பனி, சென்னையில் ஒரு factory கட்ட முடிவு செய்து.. சென்னை கட்டிட பொறியாளர்கள் சங்கத்திற்கு ஒரு tender அனுப்பியது.
(Tender என்பது, பெரிய அளவிலான வணிக கட்டிடங்கள் கட்டுவதற்கு, அந்த ஊரை சுற்றியுள்ள பிரபல கன்ஸ்டரக்ஷன் கம்பனிகளுக்கு.. தங்கள் கட்டிடத்தை கட்டித்தர கோரும் ஒரு விளம்பரம் ஆகும்.)
இதற்காக ஸ்ரீபரன் மூன்று நாட்கள் மும்பை போகும் நிலைமை ஏற்பட்டது. இதனைப் பற்றி பேச, அலுவலக பணியாளர்கள் அனைவரையும் வரவழைத்து அவசர மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்தான். மீட்டீங்கில் புலிவேந்தனும் இருந்தான்.
மீட்டிங் நடக்கும் அறைக்கு, ஸ்ரீபரன் வந்ததும், அனைவரும் எழுந்து நிற்க..
"குட் மார்னிங் பிரண்ட்ஸ்.. எல்லோரும் உட்காருங்க. இந்த அவசர மீட்டிங் இப்போ எதுக்கு ஏற்பாடு செய்தேன்-னு இங்கே இருக்கும் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. மும்பையில இருக்குற ABC கம்பனி, இங்க சென்னையில factory கட்ட முடிவு பண்ணிருக்காங்க. அதுக்கு, நம்ம சென்னை கட்டிட பொறியாளர் சங்கத்திற்கு tender அனுப்பியிருக்காங்க. அந்த tender நமக்கு கிடச்சா, நம்ம கம்பனியோட reputation அதிகமாயிடும். " என்று ஸ்ரீபரன் கூறவும் அங்கிருந்த அனைவரும் கரகோஷம் எழுப்பினர். கரகோஷம் சற்று அடங்கியதும், ஸ்ரீபரன் மீண்டும் தன் பேச்சைத் தொடர்ந்தான்.
"So, இப்ப இந்த tender நம்ம கம்பனிக்கு கிடைக்கணும்-னா, நான் மும்பைக்கு போய் ABC நிறுவனத்துட்ட போய் பேசணும். இன்னைக்கு evening flight-ல் மும்பைக்கு கிளம்புறேன். அங்கே 3 to 5 நாட்கள் தங்குற மாதிரி இருக்கும். அதுவரைக்கும், அப்பா நம்ம கம்பனிய பாத்துப்பாங்க. நான் கொடுத்த வேலைகள்-ல செய்யுறவங்களுக்கு doubts வந்தா, மதி கிட்ட கேட்டுக்கோங்க. அவ explain பண்ணிடுவாள். ஹூம்ம்...இந்த tender, நம்ம கம்பனிக்கு கிடைக்குணும்னு எல்லோரும் வேண்டிக்கோங்க.. நானும் வேண்டுறேன்." என்று கூறி தன் உரையாடலை முடித்தான்.
உரையாடல் முடிந்ததும், ஸ்ரீபரனின் கண்கள் நிறைமதியிடம் நின்றது. அவள் முகத்தில் சிரிப்பில்லை. கண்களில் நீர் முட்டிக்கொண்டிருப்பது தெரிந்தது. அலுவலக பணியாளர்கள் அனைவரும் களைந்து சென்றதும், நிறைமதியிடம் போய் பேசினான்.
YOU ARE READING
😍பூர்வ ஜென்ம பந்தம்😍
Historical Fictionமறு ஜென்மம் என்பது உண்மையா? "ஆம் உண்மை தான்" என்று உணர்த்தப்போகிறது இக்கதை. வாருங்கள்.. கதைக்குள் போகலாம்..