6. எங்கோ கேட்ட பாடல்

317 29 79
                                    

எக்மோர் இரயில் நிலையம் அருகே உள்ள அந்த பிரபல 5 நட்சத்திர ஹோட்டலில் நின்றது ஸ்ரீபரனின் கார். முதலில் இறங்கிய ஸ்ரீபரன், கார் ஜன்னல் வழியே கார் உள்ளே சோகமாக உட்கார்ந்திருந்த நிறைமதியைப் பார்த்தான்.

"மதி.. என்ன?? வரலையா?."

"இல்லை பரன். நான் வரலை. நீங்க போங்க."

"ஏன்??"

"என் மனசுக்கு ஏதோ சரியா படலை."

"என்னனு சொல்லு எங்கிட்ட."

"தெரியலை பரன். எனக்கு மனசு கஷ்டமா இருக்கு."

"இங்கே கவனி மதி.. இப்போ, நம்ம அவனை friendly-ஆ பார்க்க போறது இல்லை. வொர்க் சம்பந்தமா தான் பார்க்க போறோம். Friendly-ஆ பார்க்க போறதா இருந்தா, உன்னைய கூப்பிட்டிருக்க பாட்டேன். நம்ம முதன்முதலில் ஒரு கன்ஸ்டரக்ஷன்-ஓட முழு பொறுப்பையும் எடுத்துருக்கோம். அதுக்கு என் நண்பன் உதவி பண்ணுனா நல்லா இருக்கும்னு என் அப்பா நம்புறாங்க. அதற்காகவாவது என் கூட வா."

சற்று நேரம் யோசித்த நிறைமதி,
"சரிங்க பரன். நானும் வரேன்."

நேராக புலிவேந்தன் தங்கிருக்கும் அறை வாசலை அடைந்த ஸ்ரீபரனும், நிறைமதியும் அவனது அறைக் கதவை தட்ட.. கதவை திறந்த அந்த ஆண், ஆறு அடி உயரத்தில் கட்டுமஸ்தாக இருந்தாலும் அவன் கண்களில் சிறிதும் கருணையோ பிரியமோ இல்லை. அவன் கண்களில் ஏதோ வெறி தான் தெரிந்தது. முகத்தில் முரட்டுத் தனமே குடிக்கொண்டிருந்தது. முகத்தை மறைக்கும் அளவிற்கு முன் முடியை தாடை வரை வளர்த்திருந்தான். அவனைப் பார்க்கும் போதே நிறைமதிக்கு அடி வயிற்றில் dinosaur உறுமியது. பயத்தில் பரனின் கையை இறுக பிடித்தாள். பரனும் அவளது கையை ஆதரவாக பிடித்துக்கொண்டான்.

கதவை திறந்த அந்த ஆண்,

"வா.. பரன். உன்னைய பார்த்து எத்தனை மாதம் ஆகிடுச்சு..?" என்று ஸ்ரீபரனைக் கட்டிக்கொண்டான். அவனை ஆறத் தழுவியபடி பரன்..,,

"ஆமாம் டா. ரொம்ப மாதம் கழித்து சந்திக்கிறோம்... எப்படி டா இருக்குற? நல்லா இருக்கியா.?" என்று பரன் கேள்வியைத் தாறுமாறாக வீசிய போதிலும், கதவை திறந்த அந்த ஆடவன்.. நிறைமதியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். நிறைமதிக்கு மிகவும் சங்கடமாகத் தோன்ற.. பரனின் முதுகிற்கு பின் ஒழிந்துக்கொண்டாள்.

😍பூர்வ ஜென்ம பந்தம்😍Where stories live. Discover now