இரவு சாப்பிட்டு முடித்து, தன் அறைக்கு சென்ற விஜய்க்கு, நினைவெல்லாம் மலரிடமே இருந்தது. அவளை நினைப்பதும், சிரிப்பதுமாக இருந்தான். அப்படியே உறங்கியும் போனான்...
உறங்கியவனின் கனவில்....
யாரோ இரண்டு மன்னர் கால அரச காவலாளிகள் வந்து, விஜய்யிடம்
"உங்களை அரசர் அழைத்துவர சொன்னார்."
அழைத்தது அரசர் என்றதும், விஜய் எழுந்து அவர்களுடன் சென்றான். ஆளுக்கொரு குதிரையில் ஏறினர். குதிரை, ஒரு அரண்மணையில் நின்றது. அவர்கள், நேரடியாக அரசரை சந்தித்தனர். அரசரின் தோற்றத்தை கண்ட விஜய், அப்படியே திகைத்து நின்றான். அவரின் வயது நாற்பதுகளில் இருக்கும் என்பதை அவரின் காது ஓரத்தில் இருக்கும் நரைமுடியே உணர்த்தியது. அந்த நரைமுடி கூட அவருக்கு கூடுதல் கம்பீரத்தையும் அழகையும் கொடுத்தது. அவரின் கண்கள் விஜய்யை மிகவும் கவர்ந்திழுத்தது. அதில் ஒரு ஒளி தெரிந்ததை அவன் உணர்ந்தான்.
'ஒரு ஆணுடைய கண்கள் இவ்ளோ powerful-ஆ இருக்குமா?' என்று எண்ணியவனை அரசனின் குரல் அழைத்தது.
"உம்மிடம் ஒன்று கூற வேண்டும். அதற்காக தான் இந்த அழைப்பு." என்றார் கம்பீரமான குரலில் அரசன்.
"கூறுங்கள் அரசே.."
"ம்ம்ம்.. எனக்கு மட்டுமே சொந்தமான ஒன்று உன்னிடம் வந்து சேர்ந்திருக்கிறது." என்றார் சற்று கவலை தொய்ந்த குரலில்..
"என்னிடமா..??!!!"
"ஆம். உன்னிடம் தான். அதை, நான் தான் தொலைத்து விட்டேன். நீயாவது தொலைத்து விடாமல் பத்திரமாக பார்த்துக்கொள்." என்று கூறியவரின் குரலில் ஆணையிடும் தோரணையும் இருந்தது... ஆத்மார்த்தமான கோரிக்கை வைப்பது போலவும் இருந்தது.
அவர் கூறிய ஒற்றை வரிலையே, அவருக்கு உரிமையான அந்த ஒன்றின் முக்கியத்துவத்தை உணர்ந்தான் விஜய்.
'அப்படி எதுவும் எங்கிட்ட இல்லையே..!' என்று யோசித்தவாறு விஜய், அரசரை நோக்க... அவரின் கண்கள், விஜய்யின் கண்களை ஆழமாக ஊடுறுவியது....
YOU ARE READING
😍பூர்வ ஜென்ம பந்தம்😍
Historical Fictionமறு ஜென்மம் என்பது உண்மையா? "ஆம் உண்மை தான்" என்று உணர்த்தப்போகிறது இக்கதை. வாருங்கள்.. கதைக்குள் போகலாம்..