37. மீண்டும் மாமல்லபுரம் 👀✨

11 0 0
                                    

சூரியன் தனது உறக்கத்திலிருந்து உலகை மெதுவாக தன் பக்கம் இழுத்து, அடிவானத்தில் தன் மென்மையான தங்கக் கதிர்களை வீசத் தொடங்கினான்.

ஆகாயமானது, ஆழ்ந்த நீலத்தின் பிரகாசமான ஓவியமாக, கரும்பழுப்பு மற்றும் ரோஜா நிறங்களின் வகைகளாக மாறிக்கொண்டிருக்க... அதன் விளைவாய் இரவு நேரமானது, மெதுவாக விரட்டியடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

ஓவியனின் தூரிகையால் நுட்பமாக இழைபோடும் ஓவியம் போல், மேகத் துகள்களானது... ரோஜா மற்றும் ஆரஞ்சு வண்ணங்களில் ஒளி வீசி... பார்ப்பவர் கண்களைக் கவர்ந்து, வானமெங்கும் மெதுவாகப் பாய்ந்தன.

கதிரவனது ஒவ்வொரு கதிரும் அமைதியான வலிமையுடன் உதித்து, ஒரு புதுமையான நாளின் உறுதியையும், குளிர்ந்த வெப்பத்தையும் பரப்பிக்கொண்டிருந்தது.

விடியலின் அமைதியான அழகு, ஒரு அழகிய சக்தியோடு விரிந்து, இரவும் பகலும் சந்திக்கும் அந்த அழகிய தருணம்... எழுதப்படாத கதையின் தொடக்க அத்தியாயம் போல மிக ரம்யமாக காட்சியளித்தது.

காரின் பின்பக்க இருக்கையில் சுகமாக உட்கார்ந்திருந்த மலர், வெளியில் தன்னைக் கடந்துச் செல்லும் இந்த அழகிய காட்சிகளை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மெல்லிய புன்னகை ஒன்று அவளின் உதட்டில் தோன்ற, சூரியஒளி ஜன்னல் வழியாக அவளின் முகத்தில் விழுந்து, அவளின் நெகிழ்ச்சியான மனநிலையைத் தூண்டிவிடும் வகையில்... கன்னங்கள், கண்கள் என அவளது முக அழகினை ரசித்து ஆராதித்துக்கொண்டிருந்தது.

இவ அனைத்தையும் உற்சாகத்துடன் பார்த்த மலரோ, அப்படியே தன் தலையை கைகளில் தாங்கியபடி, அமைதியாக... இனிய சிந்தனைகளில் மூழ்கியவள் போல அல்லது வரவிருக்கும் புதிய அனுபவத்தை எதிர்நோக்கியவள் போல அவள் அமர்ந்திருக்க...

வெளியுலகத்தின் அமைதியான சூழல், அவளது அந்த யோசனைகளைக் கடத்த செய்துவிட்டு, மனதை இலகுவாக்கியது.

காலை நேரத்துககே உரிய... மனதிற்கு இதமான அமைதியில், கார் அந்த வெறிச்சோடிய சாலையில் காற்றைக் கிழித்துக்கொண்டு சென்றுக் கொண்டிருந்தது.

😍பூர்வ ஜென்ம பந்தம்😍Where stories live. Discover now