4. நாட்டியம்

364 32 92
                                    

மறுநாள் காலை, நிறைமதி ஆபீஸுக்கு தாமதமாக வந்தடைந்தாள். படிகட்டுகளில் ஏறும் பொழுது, அவளின் இந்த தாமதத்திற்கு காரணமான தன் தாயை நினைத்தவளுக்கு மன வேதனையாக இருந்தது. அவள் தாமதத்திற்கான காரணத்தை பார்க்கலாம்.....

கடிகாரம், 7 மணி என்று அலறியவுடன்.. எழுந்து அமர்ந்த நம் நிறைமதி.. தன் இரு கரங்களையும் உரசி, அதில் வந்த வெப்பத்தை அவள் கண்களில் ஒற்றியெடுக்கும் போதே.. கீழே அவள் தாய் வள்ளியின் வசைப்பாடும் சத்தம் கேட்டு பெருமூச்சு விட்டாள்..

"காலையில் எழுந்திருச்ச உடனே எப்படி நம்ம அம்மா-னால இவ்வளவு குதுகலமாக திட்டமுடிகிறது..?? சரி என்ன-னு கேட்டுவிட்டு வருவோம்.."

என்று நினைத்தவள், கீழே உள்ள சமையல் அறைக்கு சென்று வள்ளியிடம்,

"அம்மா.. எதுக்கு இப்போ காலை நேரத்திலேயே இப்படி வசைப்பாடுறீங்க? யாரை வசைப்பாடுறீங்க? கொஞ்சம் சொல்லுங்க. தெரிஞ்சுப்போம்." என வினவியவளுக்கு 'ஏன்டா வினவினோம்??!!' என்று நினைக்கும் அளவிற்கு வள்ளியிடம் இருந்து பதில் வந்தது.

"உனக்கு என்னடி மகராசி..? காலையில் சொகுசா 7 மணிக்கு எழுந்திருச்சு 10 மணிக்கு ஆபீஸ் போயிடுவ. அங்க போய் என்ன வேலை செய்ய போற? சும்மா உட்கார்ந்த இடத்திலேயே எதையாவது எழுதிட்டு அப்பறம் சாவகாசமாக 7 மணிக்கெல்லாம் வீடு வந்திடுவ. வந்து உன் அப்பாவிடம், இன்று ஆபீஸில் நடந்ததையெல்லாம் சொல்லுவ. மேடம் உங்களுக்கு காபி வேற நான் தான் கலந்து கொண்டு வர வேண்டும். காபி குடித்தவிட்டு 9.30க்கு டிபன் சாப்பிட்டு விட்டு, உன் அறைக்கு போய் தூங்கிடுவ. ஆனா நான் அப்படியா? காலையில் உங்கள் எல்லோருக்கும் முன்னாடி 6 மணிக்கெல்லாம் (!!) எழுந்திருத்து, எல்லோருக்கும் மதியத்திற்கும் சேர்த்து சாப்பாடு சமைத்துவிட்டு உன் அப்பாவிற்கு சில பல பணிவிடைகள்(!) செய்துவிட்டு உட்காருவதற்கு மணி 10.30 ஆகிவிடும். அப்பறம் நீங்க 7 மணிக்கு வந்ததும் உங்களுக்கு காபி குடுப்பதற்கு நான்ன்ன்ன்ன் சென்று கலக்க வேண்டும். நீங்களா கலந்துக்க மாட்டீங்க. உனக்கும், உன் அப்பாவுக்கும் பணிவிடை செய்யுறதிலேயே என் காலம் ஓடிக்கொண்டிருக்கு." என்று நீண்ட நெடிய பிசங்கம் பண்ணினார் வள்ளி..

😍பூர்வ ஜென்ம பந்தம்😍Where stories live. Discover now