_-10-_

238 20 19
                                    

ஆர்வத்துடன் அழைப்பையேற்றுக் காதில் வைத்தது தான் தாமதமென மறுமுனையில் ஒலித்தது அவள் எதிர்பார்ப்புக்களோடு ஏங்கித் தவித்த ஜீவனின் குரல்.

"அஸ்ஸலாமு அலைகும்" அவன் அமைதியாகவே ஆனால் சற்று வேகமாகப் பேசினான்.

"வஅலைக்குமுஸ்ஸலாம்" என்ற அய்லாவுக்கோ, ஏன் இத்தனை நாள் அழைத்துப் பேசவில்லையென்று அவனுடன் சண்டையிட வேண்டும் போலிருந்தது.

"அய்லா!"

"அ...அஸ்ல்!"

மீண்டும் அமைதி.

இருவரது இதயத்துடிப்பும் தொலைபேசியினூடாக மற்றவரைச் சென்றடைந்து கொண்டிருந்த வேளை அகிலமே தனது இயக்கத்தை நிறுத்தி விட்டு வேடிக்கை பார்ப்பதைப் போலுணர்ந்து முதலில் அமைதியைக் கிழித்தது அஸ்ல் தான்.

"என்ன செஞ்சி கொண்டிருந்தீங்க?" என்று கேட்டான்.

"சும்மா தான். இப்ப தான் ஈவ்னிங் க்ளாஸ் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்தேன். நீங்க?"

"ஓ... அப்போ நல்ல டயர்டா இருப்பிங்க போல. நான் வேற கால் எடுத்து டிஸ்டர்ப் பண்ணிட்டேன்" என்றான் சங்கடமாக.

"இல்ல இல்ல. நீங்க எப்போ கால் பண்றணு பாத்துட்டு இருந்தேன்" என்று அவளையறியாமலே மனதிலுள்ளதை அவன் முன் எடுத்துரைத்து விட்டு, வெட்கம் தாங்க மாட்டாமல் நாக்கை கடித்துக் கொண்டான்.

"என்ன? உண்மையாவா?" அஸ்லின் விழிகளிரண்டும் நம்ப முடியாமல் வியப்பில் பளபளத்ததன. அவனைப் போலவே தான் அவளும் இருந்திருக்கிறாள்!

"சரி... ஏன் திடீர்னு கால் பண்ணுனிங்க?" அய்லா கதையை மாற்றவும்,

"எவ்வளவோ நாளா கால் பண்ணத் தான் நினைச்சிட்டிருந்தன். ஆனால்..." என்று சற்று நிறுத்தி மீண்டும், "உங்கட ஸ்டடீஸ்கு டிஸ்டர்பா இருக்குமோன்னு தான்.." என்றான்.

"அது பரவாயில்லை. டேய்லி கால் பண்ணுங்களேன் அஸ்ல். உங்கள நினச்சி நினச்சே எனக்கு வேறு வேலை செய்ய முடியுறதில்ல" என்று தொண்டை வரை வந்த வார்த்தைகளைக் கடினத்துடன் மீண்டும் தொண்டை வழியே உள்ளனுப்பி விட்டு, "ம்ம்..." என்று மட்டும் சொன்னாள்.

பூத்த கள்ளி ✔Where stories live. Discover now