_-36-_

171 16 24
                                    

அஸ்ல், அய்லா இருவருமே தங்கள் மானத்தைக் கருதி ஃபரீதாவிடம் சிரித்து மழுப்பி விட, அவரும் சேர்ந்தே தன் பேரப் பிள்ளைகளுடன் சிரித்து மகிழ்ந்தார். இடையில் இருமுறை இருமியவர் அதைப் பொருட்படுத்தாது அய்லாவைத் தோளிலும் அஸ்லை மடியிலும் சாய்த்துக் கொண்டு கதை கூறினார்.

இஷாத் தொழுகைக்காக பள்ளிவாயில் சென்று வந்த அஸ்ல் தனது வருகைக்காக சுத்தம் செய்யப்பட்டு வைத்திருந்த அறைக்குள் நுழைந்து கட்டிலில் சாய்ந்தமர்ந்து கொண்டவாறே குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தான்.

தானும் தொழுது விட்டு அந்தப் பக்கமாக வந்த அய்லா சற்று நேரம் அறைக்கு வெளியே நின்று அவன் மெல்லிய குரலில் ஓதுவதைச் செவிமடுத்தாள். பின்பு உள்ளே சென்று கட்டிலில் அவனுக்குப் பக்கத்தில் ஏறியமர்ந்து கொண்டாள்.

அவள் வந்ததைப் பார்த்து விட்டுப் புன்னகையுடன் தொடர்ந்து ஓதிக் கொண்டிருந்தவன் சில நிமிடங்களில் முடித்துக் கொண்டு குர்ஆனை மூடிப் பக்கத்தில் வைத்தான்.

"அய்ல்! நான் எப்ப போவேன் தெரியுமா?" என்று குண்டைத் தூக்கிப் போட்டான். கண்கள் விரிய பார்த்தவள்,

"எதுக்கிப்ப வந்ததும் வராததுமா போறது பத்தி?" என்று அலுத்துக் கொண்டு திரும்பப் போக,

"அப்போ உங்களுக்கு அங்க வார ஐடியா ஒன்டும் இல்லயோ?" என்று புருவத்தை உயர்த்தினான். அய்லா ஆர்வத்துடன் அவனைப் பார்க்க,

"யெஸ் அய்ஸ். நான் உங்களயும் உம்மம்மாவையும் கூட்டிட்டு போகத் தான் வந்த. அங்க வாப்பா டிக்கட் எல்லாம் ரெடி பண்ணிட்டு கால் பண்ணுவாரு" என்றான்.

"உண்மையாவா? ஏன் இத மொதல்லயே சொல்லல?" என்று அவள் ஆர்வமாகத் துடிக்க,

"நீ.. சாரி நீங்க சொல்ல விட்டாத் தானே?" என்று கூறி நகைத்தவன் சும்மா வாழ்க்கையைப் பற்றி அவளுடன் பேசிக் காெண்டிருந்தான்.

அவர்களது திருமண வைபவத்தை விரைவில் நடாத்த வேண்டும் என்று அலீஷா கூறியிருந்தது ஞாபகம் வர, அதையெப்படி இவளிடம் எடுத்துரைப்பது? என்று சிந்தித்துக் கொண்டிருந்தான்.

பூத்த கள்ளி ✔Where stories live. Discover now