_-12-_

188 22 6
                                    

அஸ்லுடனான அவளது நிகாஹ் பற்றி ரீனா அறிந்திருப்பாளோ என்றெண்ணிப் பயந்து கொண்டிருந்தவளிடம், அவள் கனவிலும் நனவிலும் சற்றும் எதிர்பார்க்காத ஒன்றைக் கூறினாள் ரீனா.

"எனக்கு அஸ்ல் மேல ஒரு க்ரஷ். ஹெல்ப் பண்ணுவியா ப்ளீஸ்...?" அவளது நாய்க்குட்டி போன்ற கண்கள் அவ்வாறு கெஞ்சியும் அய்லாவுக்குத் துளியும் இரக்கம் வரவில்லை.

கடினப்பட்டுத் தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். "அஊதுபில்லாஹ்!"

'என் ஹஸ்பன்ட் மேல க்ரஷ் வச்சிக் கொள்ள இவள் யாரு?' அவளுக்கு எரிச்சலாக இருந்தது. தன்னை அமைதிப்படுத்திக் கொண்டு,

"உனக்கு எப்படி அஸ்லைத் தெரியும்?" என்றாள் சாந்தமாக.

"அ... அது... உன் வீட்டுக்கு ஒரு முற வந்தப்போ கண்டேன். இரண்டு மாசத்துக்கு முன்னால ரோட்ல இரண்டு மூனு முற கண்டேன்" என்றாள்.

"சரி... உனக்கு அஸ்ல் கிட்ட என்ன தான் பிடிச்சிருக்கு?" க்ரஷ் வரக் காரணம் தேவையில்லையென்பது நன்கு தெரிந்தும் அக்கேள்வியைக் கேட்டுத் திணற வைத்தாள் ரீனாவை.

"அஸ்ல்... க்யூட்டா இல்ல?" என்று விட்டுச் சிவந்த அவள் கன்னத்தில் பளாரென அறைந்து மேலும் சிவக்க வைக்கத் தான் விரும்பினாள் அய்லா. எனினும் அவ்வாறு செய்யாமல் விழுந்து விழுந்து சிரித்தாள்.

"ஏன் சிரிக்குற? என் ஃபீலிங்க்ஸ் உனக்கு ஜோக்கா இருக்கா?" இப்போது ரீனா கடுப்பானாள்.

"சோ சொரி மிஸ். அஸ்லுக்கு கல்யாணம் முடிஞ்சு" என்றாள் சிரிப்பதை நிறுத்தி விட்டு சீரியஸாக.

"என்ன என்ன? என்ன சொல்ற நீ? பொய் சாெல்லாத அய்லா. இவ்வளவு சின்ன வயசுல யாரு கல்யாணம் பண்ணுவா?" என்று பதறினாள் மற்றவள்.

'என் உம்மாவும் வாப்பாவும் தான்' என்று மனதுக்குள் கூறிக் கொண்டு, "நான் உண்மய தான் சொல்றேன் ரீனா. முடியும்னா ஏத்துக்க. இல்லன்னா விடு. என்ன டிஸ்டர்ப் பண்ணாத" என்று விட்டு வேகமாக நடந்தாள்.

பூத்த கள்ளி ✔Where stories live. Discover now