_-24-_

162 17 13
                                    

அவுஸ்திரேலியா வந்து சரியாக இன்றுடன் இரண்டு வாரங்கள் கடந்து விட்டன. அய்லாவுக்கு நேரம் போவதே தெரியாமலிருந்தது. அலீஷாவும் யாசிரும் தாய் தந்தையில்லாத குறையே தெரியாமல் அவளைக் கண் போலக் காத்து வந்தனர். ஒரு நல்ல தோழனாகத் துணை நின்றான் அஸ்ல். அய்லாவின் முதல் ஆண் நண்பனென்றால் அது அஸ்ல் தான்.

ஒரு பகுதி நேர ஆங்கிலப் பாடநெறி வகுப்புக்கு அய்லாவை இணைத்து விட்டான். ஒரு பொறுப்புள்ள கணவனாக அவளை நேரத்துக்குக் கொண்டு சென்று விடுவதும் அழைத்து வருவதுமாக இருந்தான். அவனுக்கு இன்னும் இரு நாட்களின் பின்னர் தான் தொழில் தருவதாக அந்த நிறுவனத்தினர் கூறியிருந்தனர். தான் பெற்ற பட்டம் கண்ணாடி அலுமாரியினூடே மின்னிக் கொண்டிருந்தது.

அய்லாவுக்கும் அஸ்லுக்கும் இடையிலிருந்த சங்கடம் நீங்கி நட்பும் அன்பும் வலுப்பெறத் தொடங்கியது. அடிக்கடி காதல் ததும்பும் பார்வைக் கணைகளை அய்லாவை நோக்கி அவன் வீசுவதை அவள் கண்டுகொள்ளாமலில்லை.

தனக்கு ஒன்றும் தெரியாததைப் போலக் காட்டிக் கொண்டு தானும் தன் வேலையும் என்றிருந்தாள். அவன் சொன்னது போலவே அவுஸ்திரேலியாவின் அழகான நகரங்களையெல்லாம் சுற்றிக் காண்பித்தான்.

தனது காரை எடுத்துக் கொண்டு அய்லா விரும்பிய இடங்களுக்கெல்லாம் அவளை அழைத்துச் செல்வதிலும் அவளுடன் நேரம் செலவிடுவதிலும் இன்பம் கண்டான் அஸ்ல். அய்லாவுக்குத் தனது பரீட்சைப் பெறுபேறுகளைப் பற்றி சுத்தமாக மறந்தே போயிற்று. அது வெளிவந்தால் என்ன? இல்லாவிட்டால் என்னவென்று இருந்தாள்.

இப்படியே அஸ்ல் வீட்டில் இருந்து விட்டால் என்னவென்று கூட சிந்தித்தாள். பெறுபேறுகள் வெளிவந்ததும் உயர்தர வகுப்புக்கள்ஆரம்பித்து விடும். அப்போது எப்படியும் இலங்கைக்குப் போய்த் தானே ஆக வேண்டும்?

இலங்கைக்குப் போவதை நினைத்தாலே இப்போது அலுப்பாக இருந்தது. எப்படியும் அஸ்ல் கூறியது போல மேற்படிப்புக்கு அவுஸ்திரேலியாவுக்கே வந்து விட வேண்டுமென எண்ணிக் கொண்டாள். அன்று மாலை அஸ்லும் ஹாமிதும் கிரிக்கட் பார்த்தவாறு சோபாவில் அமர்ந்திருந்தனர். அலீஷாவும் யாசிரும் ஏதோ வேலைக்காக வெளியே சென்றிருந்தனர்.

பூத்த கள்ளி ✔Where stories live. Discover now