பெயர் தெரியாத பறவைகள் கீச்சிடும் சத்தமும் குளிர்ச்சியான தென்றல் காற்றும் என உற்சாகமாக இருந்த ஒரு காலைவேளை.
நகரத்தின் மையப்பகுதியில் இருந்த அந்த இளம் மஞ்சள்நிறக் கட்டிடங்கள் கொண்ட பாடசாலையினுள் நாட்டின் எதிர்காலத்துக்கான தூண்களை வடிவமைக்கும் பணி நடந்துகொண்டு இருந்தது.
மாணவர்கள் 'ஆர்வமாய்ப்' பாடம் கற்கும் சத்தம் அந்த வீதியில் போவோர் வருவோருக்குத் துல்லியமாகக் கேட்டது.
பதினோராம் வகுப்பு என்ற அட்டை தாங்கிய கதவுகொண்ட அந்த வகுப்பறையில் எப்பொழுதும்போல் தரையில் மேசைகளும் கதிரைகளும் நேர்த்தியாகப் போடப்பட்டிருந்தன. ஆனால் அமர்ந்திருந்த மாணவர்களின் இதயங்களோ ஒருவித நேர்த்தியின்றித் துடித்துக்கொண்டிருந்தது. காரணமும் இல்லாமலில்லை.
பதினோராம் வகுப்பு மாணவிகளுக்கு அன்று விஞ்ஞானப் பாடத்தின் பரீட்சைத் தாள்கள் திருத்தப்பட்டுக் கையளிக்கப்பட இருந்தன.
"டீச்சர் வாராங்களா?"
"பயமா இருக்குடி.."
"நானெல்லாம் முட்டைதான்.. கோழிமுட்டை!"
"அவங்ககிட்ட வாங்கிக் கட்டிக்க வேண்டியதுதான்"
மாணவிகள் எல்லோரும் பலவாறாகத் தங்களுக்குள் பதட்டம் பாதி, ஆர்வம் பாதி பொங்கக் கதைத்துக்கொண்டிருந்தனர், ஒரே ஒருத்தியைத் தவிர..
அய்லா ஜஹான்!
பார்வைக்கு எந்தவிதப் பதட்டமுமின்றி வகுப்பறை ஜன்னல் வழியாகத் தூரத்தே தெரிந்த நீலவானத்தை நோக்கியவாறு அமர்ந்திருந்தாள். அவள் மனதுக்குள் நிகழ்ந்துகொண்டு இருக்கும் பிரசண்ட மாருதம் எங்கே வெளியே தெரியப் போகிறது?
"அய்லா.."
"…"
"அய்லூ.."
"…"
"அய்ல்ஸ்.."
"…"
எத்தனையோ தடவைகள் கூப்பிட்டும் காதில் எதுவும் விழாததுபோன்று அப்படியே அசையாமல் அமர்ந்திருந்த அய்லாவின் முதுகில்,
YOU ARE READING
பூத்த கள்ளி ✔
Spiritualபதினாறில் பாலையில் நின்றிருந்த கள்ளிச்செடிகளின் வரிசை.. அதோ அந்த ஆரம்ப வரிசையில் ஒரு செடியில் பெரிதாய் ஒரு பூ.. அதை மறைக்கத்தானோ கொஞ்சம் கொஞ்சமாய்ப் பின் சென்று நின்றது அது? இந்தக் கள்ளியும் பூக்குமா? என்ற நக்கலில் பார்வைகள் பல அதன் மேல்...