_-13-_

188 20 28
                                    

அஸாராவும் மீஸானும் மடகாஸ்கருக்குக் கிளம்பிப் போய், அடுத்த நாளே ஹனியா தன் பெற்றோரிடம் அனுமதி கேட்டுக்கொண்டு அய்லாவின் வீட்டிற்கு ஒரு வாரத்திற்குத் தங்குவதற்காக வந்தாள்.

பெற்றோர் போனதிலிருந்து சோகத்தில் அய்லாவின் எலுமிச்சை நிற முகம் சற்றே அப்பிள் போன்று மாறியிருந்தாலும் ஹனியா அவளைக் கலகலப்பாக வைத்திருக்க இயன்ற வரை முயல, அய்லாவும் இயல்பாக இருக்க ஆரம்பித்தாள்.

காலப் பறவையும் ஓய்வின்றித் தன் இறக்கைகளை அசைத்துக் கொண்டிருந்தது.

அவுஸ்திரேலியாவிலிருந்து இரு நாட்கள் கழித்து செல்வதற்காக வந்த அலீஷாவும் யாசிரும் நான்கு நாட்கள் இருந்துவிட்டே திரும்பிச் சென்றனர். அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் இருந்துவிட்டே போகலாமென்று ஆசைதான்..

ஹனியாவும் இருந்ததால் அலீஷா, அஸ்ல் சம்பந்தப்பட்ட எதையும் அய்லாவுடன் கதைப்பதைத் தவிர்த்துக் கொண்டது அய்லாவுக்கு மகா பெரிய நிம்மதியாக இருந்தது. பின்பு ஹனியாவிடம் சிக்கிக் கொண்டு திண்டாட முடியுமோ?

தோழியர் இருவரும் சேர்ந்தே பாடசாலை சென்று வருவதும், ஒருவருக்கொருவர் உதவியபடி பாடங்களைக் கற்பதும், சிறிது கதை பேசுவதும், ஃபரீதாவுடன் கதையளந்தவாறே அவருக்கு சமைக்க உதவுவதும் என இருந்தனர்.

அய்லா ஒவ்வொரு நாளும் தன் தாய் தந்தைக்குத் தவறாது அழைத்துப் பேசினாள்.

மடகாஸ்கரில் இவர்கள் நினைத்ததைவிட  நிலைமை மிக மிக மோசமாக இருந்தது. இருப்பினும் அய்லாவின் மனநிலையையும் சூழ்நிலையையும் கருத்திற் கொண்டு அவளிடம் அதுபற்றி எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை அஸாராவும் மீஸானும்.

சனிக்கிழமையன்று பாடசாலை இல்லாதமையால் இருவரும் திட்டமிட்டபடி ஒரு பாடத்தைப் படித்துக் கொண்டிருந்தனர். அன்று அவர்களுக்கு நடைபெற இருந்த கணித வகுப்பும் தவிர்க்க முடியாத காரணத்தால் இல்லாமல் ஆனதால் இன்னும் வசதியாய்ப் போனது. கொஞ்சம் அதிகமாக சுய கற்றலில் ஈடுபடலாமல்லவா?

பூத்த கள்ளி ✔Where stories live. Discover now