-_3_-

333 26 27
                                    

யாரோ தன் தோள்களைக் குலுக்குவதாக உணர்ந்தவள் திடுக்கிட்டு எழுந்து கட்டிலில் அமர்ந்தாள்.

"நான்தான்மா.. என்னாச்சு? பயந்துட்டிங்களா?"

அய்லாவை எழுப்பிய அஸாரா அவளது தலையைத் தடவியவாறு கேட்டார். அதற்குப் பதில் கூறாமல் தாயின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள் அய்லா.

"மகள்.. இன்னைக்கு என்ன இவ்ளோ நேரம் தூக்கம்? நேரமாச்சு. போய்த் தொழுங்க"

அய்லா எப்பொழுதும் எல்லோருக்கும் முன்பாக வைகறையிலேயே எழுந்து விடுவாள். ஆனால் இன்று சுபஹுக்கான நேரம் கரைந்து கொண்டிருக்க, அய்லாவின் அறைப் பக்கம் எந்த சலனம் இல்லாதிருந்தது கண்டு அஸாரா அவளை எழுப்புவதற்காக வந்திருந்தார்.

தான் அதிகநேரம் தூங்கியதை உணர்ந்தவள் அவசரமாக எழுந்து தன் அறையுடன் இணைந்தமைந்த குறியலறைக்குள் செல்ல, அஸாராவும் சமையலறை நோக்கிச் சென்றார்.

வுழூ செய்துகொண்டு வந்தவள் தொழுகையை முடித்துக்கொண்டு அஸாரா கொண்டு வந்த தேனீரை அருந்திவிட்டுப் பாடசாலை செல்வதற்காக அவசர அவசரமாகத் தயாராகினாள்.

புத்தகப்பையைத் தோளில் மாட்டிக்கொண்டவள் தன் அறையிலிருந்து வெளியேற எத்தனிக்க, மண்டபத்தில் சோபாவில் அமர்ந்து மீஸானுடன் கதைத்துக்கொண்டிருந்த அஸ்லைப் பார்த்தவள் அறையின் வாசலிலேயே தயங்கி நின்றாள்.

அய்லாவுக்கு ஒன்றும் அஸ்லைப் பிடிக்காமல் இல்லை. தன் தாயின் சகோதரியின் மகனான அஸ்ல் தன் பெற்றோருடனும் தம்பியுடனும் அவுஸ்திரேலியாவில் வசிப்பதால் அவள் அவனை அவ்வளவாக சந்தித்ததில்லை. சந்தித்தாலும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டதில்லை. அஸ்லும் அவுஸ்திரேலியாவில் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் ஒரு மாணவனே.

அய்லா இயல்பிலேயே மிகுந்த கூச்ச சுபாவம் மிகுந்தவளாகவும் இருந்ததால்,

"இப்ப அவங்கள தாண்டி போயாகனுமே.." எனக் கைகளைப் பிசைந்து பிசைந்தே ஐந்து நிமிடங்களைக் கடத்தினாள்.

பூத்த கள்ளி ✔Where stories live. Discover now