அஸ்லின் இறுதிப் பரீட்சைகள் முடிந்து விட்டதும் இலங்கைக்கு வருவதற்காக அவர்களனைவரும் சுடச்சுடத் தயாராகினர். இரண்டு வாரங்கள் தங்குவதற்குத் தேவையான உடைகளையும் பொருட்களையும் எடுத்துக் கொண்டு கிளம்பினர். அலீஷாவுக்குத் தான் தனது தங்கையின் இழப்பைத் தாங்கிக் கொள்ள இயலாதிருந்தது.
இருபது வருடங்கள் ஒன்றாகவே ஒரே வீட்டில் வாழ்ந்து விட்டு இப்போது திடீரென்று அவள் இல்லையென்று ஆகி விட்டால் எப்படித் தாங்க முடியும்?
கண்களிலிருந்து கசிந்த துளிகளை அவசரமாகத் துடைத்து விட்டுக் கொண்டதை அஸ்ல் கண்டு கொண்டான். தனது தாயின் தோளில் ஆதரவாக ஒரு கையைப் போட்டு அழைத்துச் சென்றான். விமான நிலையத்தில் காத்திருப்புக்குப் பின்னர் ஒருவாறு விமானமேறி விட்டனர். மேகங்களைக் கடந்து செல்கையில் அஸ்லின் மனம் அய்லாவை நோக்கி நகர்ந்தது.
அவளது பெற்றோர் மறைந்து இன்றுடன் இரண்டு நாட்கள். நேற்றிரவே அவளுக்கு அழைத்துப் பேசினான் தான். எனினும், அவன் மனம் அவளையெண்ணிப் பரிதவித்தது. சில மணித்தயாலப் பயணத்துக்குப் பின் இலங்கை மண்ணைத் தொட்டுப் பெருமூச்சு விட்டது விமானம். பயணிகளைவரும் இறங்கி அனைத்தையும் முடித்துக் கொண்டு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் தத்தமது வழிகளில் செல்லத் தொடங்கினர்.
ஏற்கனவே அமர்த்தியிருந்த ஒரு வாடகை வாகனத்தில் அய்லாவின் வீட்டை நோக்கிச் சென்றது அந்தக் குடும்பம். எண்ணங்களின் வேகமும் கன்னங்களின் ஈரமும் போட்டி போட்டன. அய்லாவின் வீட்டுக்கு முன்னால் வாகனம் நிறுத்தப்பட்டதும் சாமான்களையெல்லாம் இறக்கிக் கொண்டு பணத்தைக் கொடுத்து வாகனத்தை அனுப்பினார் யாசிர்.
அவசரக் குடுக்கையான அஸ்லோ ஏற்கனவே சென்று அழைப்பு மணியை அழுத்தி விட்டு பொறுமையற்று சப்பாத்தைத் தட்டித் தட்டிக் காத்திருந்தான். கதவைத் திறந்தவர் ஃபரீதா. தனது மூத்த மகளையும் அவளது குடும்பத்தையும் கண்டதுமே வற்றியிருந்த ஊற்று மீண்டும் குபுகுபுத்தது.
YOU ARE READING
பூத்த கள்ளி ✔
Spiritualபதினாறில் பாலையில் நின்றிருந்த கள்ளிச்செடிகளின் வரிசை.. அதோ அந்த ஆரம்ப வரிசையில் ஒரு செடியில் பெரிதாய் ஒரு பூ.. அதை மறைக்கத்தானோ கொஞ்சம் கொஞ்சமாய்ப் பின் சென்று நின்றது அது? இந்தக் கள்ளியும் பூக்குமா? என்ற நக்கலில் பார்வைகள் பல அதன் மேல்...