Ramadan'22 Day-6

10 6 0
                                    

السلام عليكم و رحمة الله وبركاته وبعد

بسم الله الرحمن الرحيم

الحمد لله

Tamil :

Hadith:-

'நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமலான் மாதம் நோன்பு நோற்பவரின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
[ ஸஹீஹ் புகாரி : 38 ]
அத்தியாயம் : 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை

Quran Verse:-

“என் இறைவா! எனக்கு எதை பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்; நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்ட மடைந்தோரில் நான் ஆகிவிடுவேன்” (Hud 11:47)

Day 6 Dikr:-

لا حول ولا قوة إلا بالله

"லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்"

பொருள்: அல்லாஹ்வின் உதவி இல்லாமல் யுத்தியுமில்லை சக்தியுமில்லை

நன்மை:
அபூமூசா அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (கைபர்)  இருந்தோம். அப்போது மக்கள் உரத்த குரலில் "அல்லாஹு அக்பர்" (இறைவன் மிகப்பெரியவன்) என்று (தக்பீர்) கூறலாயினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். மென்மையாக (மெதுவாக)க் கூறுங்கள். (ஏனெனில்),  நீங்கள் காது கேட்காதவனையோ இங்கு இல்லாதவனையோ அழைப்பதில்லை. (மாறாகச்) செவியுறுவோனையும் அருகிலிருப்பவனையுமே அழைக்கிறீர்கள். அவன் உங்களுடனேயே இருக்கிறான்" என்று சொன்னார்கள்.
அப்போது நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னாலிருந்துகொண்டு,"லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்"என்று கூறிக் கொண்டிருந்தேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "அப்துல்லாஹ் பின் கைஸே! உங்களுக்குச் சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலத்தை நான் அறிவித்துத் தரட்டுமா?" என்று கேட்டார்கள்.நான், "ஆம் (அறிவித்துத் தாருங்கள்), அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்" என்று சொல்லுங்கள்" என்றார்கள்.

[ஸஹீஹ் முஸ்லிம் : 5237]

//

English Translation :

Hadith:-

Narrated Abu Huraira:

Allah's Messenger (ﷺ) said, "Whoever observes fasts during the month of Ramadan out of sincere faith, and hoping to attain Allah's rewards, then all his past sins will be forgiven."
[Sahih al-Bukhari 38]

Quran Verse:-

"My Lord, I seek refuge in You from asking that of which I have no knowledge. And unless You forgive me and have mercy upon me, I will be among the losers." (Hud 11:47)

Day6 Dikr:-

لا حول ولا قوة إلا بالله




Alhamdhulillah
Jazakallah khair

الله اكبر كبيرا

Ramadan'22 RemainderWhere stories live. Discover now