Ramadan'22//Day-17

6 3 0
                                    

السلام عليكم و رحمة الله وبركاته

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

الحمد لله

##Tamil

Hadith:-

'ஒரு மனிதன் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவனாகத் தன் குடும்பத்திற்குச் செலவு செய்தால் அது அவனுக்குத் தர்மமாகிவிடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
[ஸஹீஹ் புகாரி : 55]
அத்தியாயம் : 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை

Quran Verse:-

“என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்” என்று கூறினார்.
(Al-Qasas : 24)

Dikr:-

اللَّهُ أَكْبَرُ كَبِيرًا وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلاً

Translation : "அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வ சுப்ஹானல்லாஹி புக்ரத்தவ் வ அஸீலா

பொருள் : அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப் படுத்துகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்.

சிறப்பு : இதை கூறுவதனால் வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்டன என நபி(ஸல்) கூறினார்கள்.

ஆதாரம் :

இப்னு உமர் (ரலி)அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தோம். அப்போது மக்களில் ஒருவர் அல்லாஹு அக்பர் கபீரா,
வல்ஹம்து லில்லாஹி கஸீரா,வ சுப்ஹானல்லாஹி புக்ரத்தவ் வ அஸீலா"
(அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன்.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இன்ன இன்ன வார்த்தைகளை மொழிந்தவர் யார்?"என்று கேட்டார்கள்.
அப்போது மக்களில் ஒருவர், "நான்தான் அல்லாஹ்வின் தூதரே!"என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,"நான் இதைக் கேட்டு வியப்புற்றேன். இதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்டன" என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறக் கேட்டதிலிருந்து நான் அதைக் கூறாமல் இருந்ததில்லை.
(ஸஹீஹ் முஸ்லிம் : 1052)








//







##English Translation

Hadith:-

Narrated Abu Mas'ud:

The Prophet (ﷺ) said, "If a man spends on his family (with the intention of having a reward from Allah) sincerely for Allah's sake then it is a (kind of) alms-giving in reward for him.
[Sahih al-Bukhari - 55]

Quran Verse:-

"My Lord, indeed I am, for whatever good You would send down to me, in need."
(Al-Qasas : 24)






ربنا تقبل منا انك انت السميع العليم









Alhamdhulillah
Jazakallah khair

~اسحاق

Ramadan'22 RemainderWhere stories live. Discover now