Day-10

11 6 0
                                    

السلام عليكم و رحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

الحمد لله

Tamil :

Hadith:-

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பேரின் பிரார்த்தனைகள் மறுக்கப்படாதவைகளாகும். அதில் ஒன்று

"நோன்பாளி நோன்புத் துறக்கும் போது செய்யும் பிரார்த்தனை."
[Tirmidhi-2526]

Quran Verse:-

மேலும், எந்த நிஃமத் (பாக்கியம்) உங்களிடம் இருந்தாலும் அது அல்லாஹ்விடமிருந்து உள்ளதேயாகும்.
(An-Nahl 16:53)

Day-10 Dikr:-

குறைந்த நேரத்தில் நிறைய நன்மை தரும் திக்ரு:

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ ، عَدَدَ خَلْقِهِ ، وَرِضَا نَفْسِهِ ، وَزِنَةَ عَرْشِهِ ، وَمِدَادَ كَلِمَاتِهِ

Translation: சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி அதத கல்கிஹி, வ ரிளா நஃப்சிஹி, வ ஸினத்த அர்ஷிஹி, வ மிதாத கலிமாத்திஹி

பொருள்:

அல்லாஹ்வை அவனுடைய படைப்புகளின் எண்ணிக்கை அளவுக்குத்   தூயவன் எனத் துதிக்கிறேன். அல்லாஹ்வை அவன் உவக்கும் அளவுக்குத் தூயவன் எனத் துதிக்கிறேன். அல்லாஹ்வை அவனது அரியணையின் எடையளவுக்குத் தூயவன் எனத் துதிக்கிறேன். அல்லாஹ்வை அவனுடைய சொற்களின் எண்ணிக்கை அளவுக்குத் தூயவன் எனத் துதிக்கிறேன்.

நன்மை:

(நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) ஜுவைரியா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகைக்குப்பின் அதிகாலையில்  என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது நான் எனது தொழுமிடத்தில் அமர்ந்திருந்தேன். பிறகு அவர்கள் முற்பகல் தொழுகை (ளுஹா) தொழுதுவிட்டு வந்தார்கள். அப்போதும் நான் (அதே இடத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது என்னிடம், "நான் உன்னிடமிருந்து சென்றது முதல்  இதே நிலையில்தான் நீ  இருந்துகொண்டிருக்கிறாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன்.
நபி (ஸல்) அவர்கள், "நான் உன்னிடமிருந்து சென்றதற்குப் பிறகு நான்கு (துதிச்) சொற்களை மூன்று முறை சொன்னேன். அவற்றை இன்றைக்கெல்லாம் நீ சொன்னவற்றுடன் மதிப்பிட்டால், நீ சொன்னவற்றை அவை மிகைத்துவிடும். (அவை:) சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி அதத கல்கிஹி, வ ரிளா நஃப்சிஹி, வ ஸினத்த அர்ஷிஹி, வ மிதாத கலிமாத்திஹி (ஆகியவையாகும்)" என்றார்கள்.
(பொருள்: அல்லாஹ்வுடைய படைப்புகளின் எண்ணிக்கை அளவுக்கும், அவன் உவக்கும் அளவுக்கும், அவனது அரியணையின் எடையளவுக்கும், அவனுடைய சொற்களின் எண்ணிக்கை அளவுக்கும் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்.)

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
[ஸஹீஹ் முஸ்லிம் : 5272]





//





English Translation :

Hadith:-

Jami' at-Tirmidhi 3598

Abu Hurairah narrated that the Messenger of Allah (ﷺ) said:

There are three whose supplication is not rejected: the one is; The fasting person when he breaks his fast.

Quran Verse:-

And whatever you have of favor - it is from Allah.
(An-Nahl 16:53)

Day-10 Dikr:-

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ ، عَدَدَ خَلْقِهِ ، وَرِضَا نَفْسِهِ ، وَزِنَةَ عَرْشِهِ ، وَمِدَادَ كَلِمَاتِهِ

Translation: Subḥānallāhi wa biḥamdih: 'adada khalqih, wa riḍā nafsih, wa zinata 'arshih, wa midāda kalimātih.

[Hisn al-Muslim 94]

Meaning:

Glory is to Allah and praise is to Him, by the multitude of His creation, by His Pleasure, by the weight of His Throne, and by the extent of His Words. (Recite three times in Arabic upon rising in the morning.)

"Try to recite 100 times"
In shaa Allah

(Reference:Muslim 4/2090)

[Riyad as-Salihin 1433]

Juwairiyah bint Al-Harith (May Allah be pleased with her), the Mother of the Believers, reported:

The Prophet (ﷺ) came out from my apartment in the morning as I was busy in performing the dawn prayer. He came back in the forenoon and found me sitting there. The Prophet (ﷺ) said, "Are you still in the same position as I left you." I replied in the affirmative. Thereupon the Prophet said, "I recited four words three times after I had left you. If these are to be weighed against all you have recited since morning, these will be heavier. These are: Subhan-Allahi wa bihamdihi, 'adada khalqihi, wa rida nafsihi, wa zinatah 'arshihi, wa midada kalimatihi ['Allah is free from imperfection and I begin with His praise, as many times as the number of His creatures, in accordance with His Good Pleasure, equal to the weight of His Throne and equal to the ink that may be used in recording the words (for His Praise)']." [Muslim]











Alhamdhulillah

Jazakallah khair ✨

Ramadan'22 RemainderWhere stories live. Discover now