🔱பாவலனின் பாவை இவள்🔱
🔱பாகம் 3️⃣2️⃣
பவானி - நான் யாரை என்னோட உயிர் தோழி....என்னோட நலம் விரும்பி என்றெல்லாம் நினைத்து இருந்தேனோ... அந்த பெண் என்னோட உடன் பிறந்த சகோதரி என்ற உண்மையை என்னிடம் சொல்லி... அவள் கரங்களை என் கரங்களோடு இணைய வைத்தார்....
என்று பனிமலரின் உருவத்தில் இருக்கும் பவானி..... சித்ரபாவையை தன் உடன் பிறந்த சகோதரி என்று நீதிபதி பார்த்திபன் முன் சொல்ல.....
கிருஷ்ணா - இது என்ன புது கதை.... முதல்ல நீயே பவானியா என்று எங்களுக்கு சந்தேகம் இருக்கும் பட்சத்தில் இப்போ புதுசா வக்கீல் சித்ரா பாவையை பவானியின் சகோதரி என்று கதைக்குள் கதை சொல்றிங்க...
சித்ரா - இங்க யாருமே கதை சொல்லாத பட்சத்தில் கதைக்குள் கதையெல்லாம் சொல்ல அவசியம் இல்லை mr கிருஷ்ணன்..
கிருஷ்ணா - சரி இருந்துட்டு போகட்டும்.... இப்போ என்ன சொல்ல வரீங்க.... நீங்களும்,இந்த பனிமலர் உருவத்தில் இருக்கும் பவானியும் தான் சிவகாமி ரங்கநாதன் வாரிசுன்னு சொல்ல வரிங்களா.... ஒ... அப்போ அவங்களோட கோடி கணக்கான சொத்தும் உங்க ரெண்டு பேருக்கு மட்டுமே கிடைக்கணும்னு தான் இந்த ட்ராமா எல்லாமா....??
சித்ரா - பணம்...
பணம்.. பணம்.. யாருக்கு வேணும் சார் உங்க பணம்.....நீங்க சொன்னது போலவே இந்த வழக்குக்கும் என்னோட பிறப்புக்கும் எந்த சம்மந்தமும் இல்லை தான்... So பவானி... pls நீங்க உங்களுக்கு நடந்த அநியாயத்தை பற்றி மட்டும் பேசுங்க...பவானி - இல்ல சித்து.... உன் பிறப்புக்கும் இந்த வழக்குக்கும் சம்மந்தம் இருக்கு..யுவர் honour.... எங்க அம்மா சிவகாமிக்கு பிறந்தது இரட்டை குழந்தைங்க... ஒன்னு நான்.. இன்னநோன்னு என் அக்கா சித்ராப்பாவை... அவ பிறந்ததுமே அவளோட இருதயத்துல ஓட்டை இருந்ததால அவளை காப்பாற்ற முடியாதுன்னு dr சொல்லிட்டாங்க..அப்போ என் தாத்தா.... இரட்டை பிள்ளையில் இன்னோரு பிள்ளை இறந்தே பிறந்தது என்று என் அம்மா அப்பாவிடம் சொல்லி சித்ரபாவையை பிரசவம் பார்த்த ஹாஸ்ப்பிட்டல்லயே பணம் கொடுத்து அந்த பிஞ்சி பிள்ளையின் கதையை முடிக்கவும் சொல்லி உள்ளார்....
VOUS LISEZ
🔱பாவலனின் பாவை இவள்🔱
Roman d'amourகதையில் விளக்கம் சொல்லும் அளவுக்கு ஏதும் இல்லை..... எண்ணத்துக்கு தோன்றிய என்னத்தயாவது எழுதியது தான்....