இந்த உலகில் யாரிடம் கேட்டாலும்
கூறுகிறார்கள்
நான் உருவம் என்றால் நீ என் நிழலென்று-இல்லை
இரவில் உன் நிழல் உனக்குத் தெரியாது
நான் உடல் என்றால் நீ என் உயிரென்று-இல்லை
இறந்த பின் அதுவும் விட்டுச் செல்லும்
நான் கண் என்றால் நீ என் இமையென்று-இல்லை
இடையில் வெற்றிடம் ஒன்று உள்ளது
நான் நிலவு என்றால் நீ என்
விண்மீனென்று-இல்லை
அம்மாவாசையில் நிலவு தெரியாது
நான் சூரியனென்றால் நீ என்
வெளிச்சமென்று-இல்லை
மேகம் சூரியனையும் நிலவையும் பரிக்கும்
நான் கூறுகிறேன்
நீயும் நானும் "காதல் பறவைகள்" என்று -ஒன்று
இல்லை எனினும் மற்றொன்று
உயிருடன் வாழாது...