45 பறவைகள் விரித்தன தன்
சிறகை கேரளாவை நோக்கி.
இவைகள் பாலினத்தால்
வேறுபட்டிருந்தாலும் மனதில்
ஒரேஒரு நினைப்பு மட்டுமே,
அது தான் நட்பு என்னும் பிணைப்பு.
இருவர் வழி நடத்த,
இரு நாட்கள்,
இரு இனப் பறவைகளும்,
ஒரே குறிக்கோளுடன் பறந்தன ,
அதுதான் கொண்டாட்டம்.
ஆட்டம், பாட்டம்,கொண்டாட்டமென
நாட்கள் இரண்டும் விறு விறுவென
ஓடின
இரு நாட்களும்
கஷ்டங்கள் எங்களை தாக்க வில்லை,
இன்பங்கள் எங்களை விட்டு விலகவில்லை.
அரபிக் கடலில் எங்கள் நட்பின் பிணைப்பைக் கண்ட அனைத்து
வாய்களும் ஆஆஆ என்று வியந்தன.
அரபிக் கடலின் அலைகளும் எங்கள்
நட்பைப் பார்த்து எதற்க்கு நமக்கு வம்பு
என்று அடங்கிப் போனது.
ஆண்,பெண் வேறுபாடின்றி
நட்பு என்னும் ஒற்றைப் பிணைப்பால்
பிணைந்தன எங்கள் கைகள்.
இரவில் அதிகரித்தது கடல் அலைகள்
மட்டும் அல்ல,
எங்கள் நட்பும் ,
ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த
பாசமும் தான்
கல்லூரியில் மட்டுமல்ல
கம்பெனியிலும் கட் அடிப்போம்
என்பது நினைக்காத ஒன்று.
பேக்வாட்டரில் பாட்டுக்கு பாட்டு
மறக்க முடியாதது.
டிஜே பாடல் காதில் விழத்
தங்களையே மறந்து ஆடியது
இந்தக் கூட்டம்.
நிமிடத்திற்க்கு நிமிடம் சந்தோசம் மட்டும் இருமடங்கு அதிகரித்துக்
கொண்டே சென்றது
ஒரு தாய் பிள்ளைகள் போன்று சிலர்
கை கோர்த்தோம்,
வேறு சிலர் தன் அம்மாவின்,
அண்ணன் மகன்/மகள் என்று நினைத்து கை கோர்த்தனர்
மொத்தத்தில் இந்த சுற்றுலா
மரண மாஸ்...