உன் கண்விழியைக் கண்ட ஆதவனும்
அடைக்கலம் அடைவான் மேகத்திடம்
என்னையே சுட்டெரிக்கும் ஒளிக்கண்டேனே ஒருவளிடம்,
அவளின் கண்ணோ
ஆயிரமாதவன் போன்றது,
கூந்தலோ கடலின் அலையைப் போன்றது,
மூச்சுக் காற்றோ புயலைப் போன்றது,
முகமோ திணறவைக்கும் தேன்னிலவு போன்றது,
அவ்வெண்மதியைக் காணாது ஓடிவந்தேனே,
அத்தேவதையின் பார்வைனின்று
உலகைக் காக்க,
அப்பனிமலரின் மேல்பன்னீர்
மழையைத் தெளிப்பாயாக...