7

1.5K 107 137
                                    

ராமின்  தந்தையுடன் வந்திருக்கும்   நபரைப்பார்த்தவுடன்   விஷ்ணுவிற்க்கு வாயடைத்துப்போனது. தொண்டைக்குள்   ஏதோ சிக்கியது   போன்ற உணர்ச்சி ஏற்பட்டது.   இருக்காதா  பின்னே !. தான்   கனவில்   பார்த்த  அதே  நபர்  நேரில்   வந்தால்   பாவம்   அவன்  என்ன  செய்வான்.  தன்னிச்சையாகவே   அவன்   கண்கள்   ஆச்சரியத்தில்  விரிந்தது..... ஷாக்சாத்  அவன்  கனவில்  வந்த  ராஜசிம்மனின்   தோற்றத்திலேயே  இருந்தான் ஈஷ்வரபாண்டியனுயன் வந்தவன். கனவில் வந்தவனுக்கும் இவனுக்கும் அணிந்திருக்கும் ஆடையைத் தவிர வேறு வித்தியாசத்தையே  கண்டறிய இயலவில்லை.

            ஈஷ்வரபாண்டியனும்    விஷ்ணுவின் கனவில் வந்தவனும்    வீட்டின்    கூடத்திற்கு   வந்தனர்.  அங்கு  வந்தவுடன்  ஈஷ்வரபாண்டியன்   அங்கிருந்த  விஷ்ணு , வேதா , ராம் , கௌரி ஆகியோரை     புதிதாக  வந்தவனுக்கு  அறிமுகப்படுத்தினார் .  

             பின்பு  புதியவனை  அனைவருக்கும்  அறிமுகப்படுத்தினார் . ராம் , இவர்தான்   ராஜீவ்   நம்ம  அருணாச்சலம் இருக்காருல்ல   அவரோட   பையன் .  இங்க  பக்கத்து   ஊரில்   அவங்க  சொந்தகாரர்   வீட்டில்கல்யாணமாம்   அதில  கலந்துக்கிறதுக்காக  வந்துருக்காரு  என  ஈஷ்வரபாண்டியன்   கூறினார். 

                உடனே   கௌரி    அருணாச்சலம் அண்ணாவின்  பையனா   அதான்   எங்கயோ  பார்த்த  மாதிரி  இருக்கேன்னு  நினைச்சேன் . அப்படியே  அண்ணாவின்  ஜாடை என  கூறிக்கொண்டே  அவனிடம்  அப்பா   எப்படி  இருக்காருப்பா  ?  அவர்  உங்க கூட வரலியா   “  என  அவனிடம்   கேட்டார் . 

                “ இல்ல  ஆன்டி   அவர்தான்  இங்க  வருவதாக   இருந்தது .   ஆனால்  திடீர்னு   ஒரு   முக்கியமான   வேலை  வந்துடுச்சு   அதான்  என்ன  இங்க  அனுப்பிட்டார்   என   கூறினான் . 

               பின்பு    ராமிடமும்   விஷ்ணுவிடமும்   சம்பிரதாயத்துக்கு   கைகுலுக்க  அவர்களிடம்   வந்தான் . ஆனால்  விஷ்ணுவிடம்  வரும்போது ,   விஷ்ணு   அவனையே  வைத்த கண்  மாறாமல் பார்த்துக்கொண்டிருந்தான் . அப்போது  ராம்  டேய்  விஷ்ணு  அவன் எவ்வளவு  நேரமா  கையை   நீட்டிட்டு   இருப்பான் .  இப்படி  அவனை  சைட்  அடிக்கிறதை   நிறுத்திட்டு   கையை  குடுடா  மானம்  போகுது  பக்கி “ என  விஷ்ணுவின்  காதோரம்  யாருக்கும்  கேட்கா  வண்ணம்   கூறினான் . 

அது மட்டும் ரகசியம்Where stories live. Discover now