அனைத்துக் காட்சிகளும் மெல்ல மெல்ல விஷ்ணுவின் கண்முன்னே தெளிவற்ற காட்சிகளாகி மறைந்தன . உடலில் மின்சாரம் பாய்ந்தது போல உணர்ந்த விஷ்ணு சட்டென தன் கண்களைத்திறந்தான் . தன் உடல் நடுங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தவன் தான் இருக்கும் இடத்தை ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்தான் . தான் இன்னும் குகைக்குள்தான் இருக்கிறோம் என்று தெளிந்தவன் தான் இதுவரைக் கண்டது அனைத்தும் என்னவென்று ஒரு கணம் யோசித்தான் . ஏனெனில் அவன் காட்சிகளாக கண்ட அனைத்து நிகழ்ச்சிகளும் தனக்கே தத்ரூபமாக நிகழ்ந்தது போல் இருக்கவே அவனால் எளிதாக சுயநிலைக்கு வர இயலவில்லை .
தன்னை சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக்கொண்டவனுக்கு அப்போதுதான் அனைத்தும் நினைவிற்க்கு வந்தது . தான் குகைக்கு வந்தது , சந்நியாசியை சந்தித்தது என்று வரிசையாக நினைவிற்க்கு வந்தது . அப்போதுதான் தனக்கு எதிரே அமர்ந்திருந்த சந்நியாசியை காணவில்லை என உரைத்தது .
அந்த சந்நியாசி அமர்ந்நிருந்த இடத்தின் அருகில் ஒரு வெள்ளைக்காகிதம் சடசடத்துக்கொண்டிருந்தது . அதை எடுத்துப்பிரித்தவன் அதைப்படிக்கலானான் . “ என்னுடைய வேலை முடிந்துவிட்டது விஷ்ணுவர்மா . நீ உரைத்த சத்தியத்தின்படி இறைவனை அவனின் பீடத்தில் அமரவைக்கும் பொறுப்பு இனி உன்னுடையதாகும் . இப்பொழுது குகையின் வாயிற்கதவு திறந்திருக்கும் , நீ செல்லலாம் “ என எழுதியிருந்ததைப் படித்தவன் மந்திரத்திற்க்கு கட்டுண்டது போல அப்படியே செய்தான் .
குகையின் வாயிலை அவன் தாண்டியவுடன் பழையபடி குகைக்கதவு மூடிக்கொண்டு அங்கு அப்படி ஒரு குகையே இருந்த சுவடு தெரியாத அளவிற்க்கு மாற்றியது .
பல்வேறு எண்ணங்கள் மனத்தினிலும் , உணர்ச்சிகள் முகத்திலும் நர்த்தனம் ஆட தன் காரை நோக்கி நடந்தான் விஷ்ணு.
![](https://img.wattpad.com/cover/119742897-288-k6313.jpg)
YOU ARE READING
அது மட்டும் ரகசியம்
Mystery / Thrillerகதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உதித்த முதல் கதை . தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றிங்கோ ....