பௌர்ணமி நிலவு வானவீதியில் தன் நட்சத்திரப் பட்டாளங்களுடன் ஊர்வலம் நிகழ்த்திக்கொண்டிருக்கும் சுகந்தமான இரவு நேரத்தில் விஷ்ணு மொட்டை மாடியில் நின்று ஆகாயத்தையே வெறித்துக்கொண்டிருந்தான்.
தன்னைச் சுற்றி நிகழும் அதிசயங்களின் வீரியத்தால் எதிலும் மனம் லயிக்காமல் இருநீதவனை கலைத்தது வேதாவின் குரல்.
"என்ன விஷ்ணு சார் இங்க நிக்கறீங்க … தூங்கலையா இன்னும்" என்றபடி அவனருகில் வந்து நின்றாள் வேதா.
"இல்ல வேதா தூக்கம் வரல… அதான் கொஞ்சம் காத்தாற நிக்கலாம்னு இங்க வந்தேன். நீங்க என்ன இன்னும் தூங்காம இருக்கீங்க? " என எதிர்கேள்வி கேட்டான் விஷ்ணு"
"இல்ல அதுவந்து … அது இருக்கட்டும் நீங்க எங்க போனீங்க மார்னிங்க்ல இருந்து ஆளையே காணலை … ராம் எவ்வளவு பயந்துட்டான் தெரியுமா? லன்ச் சாப்பிட கூட நீங்க வரலை … அத்தை நீங்க எங்க எங்கன்னு கேட்டு ராமை நச்சரிச்சிட்டாங்க … ஒரு ஃபோன் கூட எடுத்து பேசமாட்டீங்களா "என கேட்டுக்கொண்டே சென்றவளையே ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான் விஷ்ணு .
"என்ன விஷ்ணு நான் பாட்டுக்கு கேட்டுட்டு இருக்கேன் நீங்க பாட்டுக்கு அமைதியா இருக்கீங்க … நான் என்ன கதையா சொல்லிட்டு இருக்கேன்"என்று கடுப்புடன் கூறினாள் வேதா.
"கௌரி அம்மாவும் , ராமும் மட்டும்தான் என்னை காணாமல் கஷ்டப்பட்டாங்களா?" என்று அவளையே வைத்த கண் வாங்காமல் கேட்டான்.
அவனின் கேள்வியின் அர்த்தம் புரிந்துவிட்டது ஆனால் புரியாதது போல் " இல்ல … அப்படியில்ல எல்லாருமேதான் பயந்துட்டோம்… ஏன் நம்ம கெஸ்ட் ராஜீவ் கூட நீங்க மொபைல் அட்டென்ட் பண்ணலன்ன உடனே வண்டி எடுத்துட்டு தேடலாம்னு சொன்னாரு" எனக் கூறினாள்.
ராஜீவின் பெயர் கேட்ட நொடி அவனின் முகம் விஷ்ணுவின் மனக்கண்ணின் முன் வந்து நின்று ஆயிரம் சம்மட்டிகளால் தலையை அடிப்பது போல் இருந்தது. தலையைப் பிடித்துக்கொண்டவன் நின்றிருந்த இடத்திலேயே அப்படியே முட்டி போட்டு அமர்ந்துவிட்டான்.
YOU ARE READING
அது மட்டும் ரகசியம்
Mystery / Thrillerகதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உதித்த முதல் கதை . தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றிங்கோ ....