அந்த மோதிரம் ராமினுடையது என்ற ஜீவாவின் பதிலில் அதிர்ச்சியில் உறைந்து நின்றான் விஷ்ணு. “ டேய் ...டேய் விஷ்ணு...என்னடா ஆச்சு ... ஏன் இப்படி டென்ஸ்டா இருக்க? சொன்னாதானே தெரியும்.சொல்லுடா விஷ்ணு ...” என விஷ்ணுவை உலுக்கியபடி கிட்டத்தட்ட கத்தியேவிட்டான் ஜீவா .
ஜீவாவின் சத்தத்தில் தன்னிலைக்கு வந்த விஷ்ணு “ ஒன்னும் இல்லைடா “ என்றவாறு அவ்விடத்திலிருந்து நகர எத்தனித்தான். அவனுக்கு முன்பாக சென்று அவனின் வழியை மறித்த ஜீவா “ இங்க பாரு விஷ்ணு ... நான் உன் ஃப்ரண்ட் உன் கூட ஸ்கூல் டேஸ்ல இருந்து பழகிட்டு வரேன். நீ எந்த எந்த சமயத்துல எப்படி எப்படி ரியாக்ட் பண்ணுவன்னு எனக்கு நல்லாவே தெரியும் .எனக்கு தெரிஞ்ச வரையில் நீ இப்படி விசித்திரமா நடந்துகிட்டதே இல்லை. இப்படி நீ வியர்டா நடந்துகிட்டு இருக்கன்னா அதுக்கு பின்னாடி கண்டிப்பா ஒரு ஸ்ட்ராங்க் ரீஸன் இருக்கும் . என்கிட்ட உண்மையை மறைக்க ட்ரை பண்ணாத விஷ்ணு ... ப்ளீஸ் சொல்லு என்ன விஷயம் “ என வருத்தத்துடன் கேட்டான்.
ஜீவாவின் கெஞ்சல் விஷ்ணுவின் மனதைப்பிசைய அவனிடம் சொல்லிவிடலாம் எனவும் நினைத்தான். ஆனாலும் வேதாவைப் போல இவனும் தான் கூறுவதை நம்பாமல் தன்னையே கேலி செய்வானோ என்ற ஐயத்துடன் உண்மையை கூறுவதைத் தவிர்த்தான்.
ஆனாலும் பள்ளிப்பருவத்திலிருந்தே விஷ்ணும் ஜீவாவும் உற்ற நண்பர்களாக இருந்து வந்துள்ளதால் விஷ்ணுவின் ஒவ்வொரு அசைவும் ஜீவாவிற்கு அத்துப்படி. சட்டென்று விஷ்ணுவிற்கு முகம் மாறினால் கூட நொடியில் அதை கண்டுபிடிப்பவனாயிற்றே...ஆகையால் இப்பொழுதும் விஷ்ணு கூறுவதில் இருந்தே ஏதோ பொய்யுரைக்கிறான் என யூகித்துவிட்டான் ஜீவா.
"இங்க பாரு விஷ்ணு… நீ மத்தவங்க கிட்ட இருந்து என்ன வேணாலும் மறைக்கலாம்… ஏன் ராம் கிட்ட இருந்து கூட தப்பிச்சிடலாம்... ஆனா மகனே என்னை சாதாரணமா நினைச்சிடாத உன்னோட ஆதியில இருந்து அந்தம் வரைக்கும் எனக்கு நல்லா தெரியும் மரியாதையா என்ன மறைக்கிறன்னு என் கிட்ட சொல்லிடு… இல்லன்னா இப்பவே இங்க இருந்து கிளம்பிடலாம்.

أنت تقرأ
அது மட்டும் ரகசியம்
غموض / إثارةகதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உதித்த முதல் கதை . தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றிங்கோ ....