14

1.3K 85 88
                                    

சூரியன்   ஆரஞ்சு   வண்ண  பந்து  போல  தன்  உருவத்தை  மாற்றிக்கொண்டு  அஸ்தமனமாகப்போகும்  அந்த  மாலை  வேளையில்  ராமின்  கார்  அந்த  சாலையில்   வழுக்கிக்கொண்டு  சென்றுகொண்டிருந்தது . 

        காரை  ராம்  செலுத்திக்கொண்டிருக்க   அவன்   அருகில் உள்ள   இருக்கையில்  ராஜீவ்   அமர்ந்திருக்க  விஷ்ணுவும்  வேதாவும்  பின்  இருக்கையை  ஆக்ரமித்திருந்தனர் . நாள்   முழுவதும்  அந்த   சுற்றுலாத்தலத்தினை  நன்றாக   சுற்றிப்பார்த்ததில்  சிறிது  களைத்திருந்தனர் .  ஆனாலும்  அந்த  இடத்தின்  அழகானது   மனத்தில்  ஒருவித  கிளர்ச்சியை   இவர்களுக்குள்  பதித்துவிட்டுத்தான் அனுப்பியிருந்தது . விஷ்ணு ஒருவனுக்குத் தவிர.

         அடுத்த  இரண்டுமணி  நேரத்தில்   அவர்கள்  வீட்டை  அடைந்தனர் .   அங்கே  ஹாலில்  ராமின்  தந்தை  ஈஸ்வரபாண்டியன்   அவ்வூர்  பெரிய  மனிதர்களோடு   அமர்ந்து ஏதோ  பேசிக்கொண்டிருந்தார் .  

          "என்ன சதாசிவம் நம்ம ஊரு திருவிழா வேலையெல்லாம் எப்படி போயிட்டு இருக்கு…"என்று  நெற்றியில் பெரிதாக பட்டைத் தரித்திருந்திருந்த மனிதரிடம் கேட்டுக்கொண்டிருந்தார் ஈஸ்வரபாண்டியன்.

       "அதெல்லாம் கடவுள் அருளால நல்லா போய்கிட்டு இருக்கு… கோவில்ல இன்னும் கொஞ்சம் அறைங்கள்லாம் சுத்தம் பண்ணனும் . கோயில் மண்டபம் , பாதள அறைன்னு ஒரு சிலது சுத்தம் பண்ண வேண்டி இருக்குங்கய்யா" என்று சதாசிவமும் சொல்லிக்கொண்டிருந்தார்.

"நம்ம கோவில்ல பாதாள அறை இருக்குன்றதையே சமீபத்துல தான் நாம கண்டுபிடிச்சோம் … அதுக்குள்ள என்னெனல்லாம் இருக்குன்னே தெரியாது … ஏதாவது பூச்சி பொட்டு இருக்கப்போகுது ...அந்த அறையை எப்படிய்யா சுத்தம் பண்றது… எவன் தைரியமா உள்ள போய் க்ளீன் பண்ணுவான்" கேள்விக்குறி தொக்கிய முகத்துடன் கேட்டார் ஈஸ்வரபாண்டியன்.

"இல்லைங்கய்யா அது அதுக்குன்னு ஆளுங்க இருக்காங்க… நான் எனக்கு தெரிஞ்ச ஆளுங்களை வரவழைக்கட்டுங்களா?" எனக் கேட்டார் சதாசிவம்.

அது மட்டும் ரகசியம்Where stories live. Discover now