காரை காளையென விரட்டியவன் சற்று நேரத்திற்க்கெல்லாம் காலையில் தான் சென்ற அக்குன்றிற்கு செல்லும் வழியில் செலுத்திக்கொண்டிருந்தான் .
சில நிமிடங்களில் அக்காட்டுப்பிரதேசத்தினில் காரை நிறுத்தி அக்குன்று உள்ள திசையில் சென்றான் . அந்த நேரத்தில் அப்பிராந்தியத்தில் மையம் கொண்டிருந்த மையிருட்டு சற்று அச்சத்தைக்கொடுத்தாலும் அதையெல்லாவற்றையும் தூக்கி ஒரு ஓரமாக வைத்துவிட்டு அந்த கோவிலை நெருங்கினான் .
கோவிலை அடைந்து அந்த பாதாள அறைக்கும் வந்துவிட்டான் . விஷ்ணு தன் டார்ச்சினால் ஒளியைப் பீய்ச்சி அடித்து காலையில் தான் பார்த்த அந்த அறையை சுற்றும் முற்றும் பார்த்தான் . அவன் கண்ணுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய அளவில் அங்கு ஏதும் புலப்படவில்லை . எனவே சிறிது தைரியத்தை வரவழைத்துக்கொண்டு முன்னே சென்றான் .
பகல் பொழுதிலேயே இருட்டாக இருந்த குகையானது இரவின் மடியில் இன்னும் கனத்த இருட்டாக மாறி இருந்தது . கையோடு கொண்டு வந்திருந்த டார்ச்சின் உதவியினால் அந்த இருட்டை வெளிச்சமாக்கி முன்னேறிக்கொண்டிருந்தான் விஷ்ணு.
அங்கு குகையின் நிலவறை போன்ற அமைப்பு காணப்பட அதனுள் இறங்கினான். அவனின் இதயத் துடிப்பு அவனுக்கே கேட்கும் வகையில் சர்வ நிசப்தமாக இருந்தது அந்த நிலவறை.
டார்ச்சின் உதவியினால் அந்த நிலவறையை சுற்றி சுற்றிப்பார்த்து மரகத லிங்கத்தை தேடிக்கொண்டிருந்தவனுக்கு அதிர்ச்சியே மிஞ்சியது.
வேதாவும் விஷ்ணுவும் அந்த குகையினுள்ளேயே சிறிது தூரம் வரைதான் வந்திருந்திருந்தனர். ஆனால் அங்கு புதிதாக காலடித்தடங்கள் அங்கு பதிந்தபடி இருக்கவே அதைப் பார்த்தவனுக்கு தூக்கி வாரிப்போட்டது.
"அடக் கடவுளே… என்ன இது எப்படி இந்த தாலடித் தடங்கள் இங்க வந்துச்சு… என்னைத் தவிர யார் இங்க வந்திருப்பாங்க …." என யோசித்தபடியே அந்த காலடித்தடத்தை தொடர்ந்து சென்றான் . பத்தடி தூரம் வரைப் பதிந்திருந்த காலடித்தடங்கள் அதன்பிறகு இல்லாமல் போனது . சற்று கூர்ந்து கவனித்ததில் ஒரு விஷயம் மட்டும் அவனுக்கு புரிந்தது .

STAI LEGGENDO
அது மட்டும் ரகசியம்
Mistero / Thrillerகதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உதித்த முதல் கதை . தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றிங்கோ ....