6

1.7K 104 190
                                        

தனக்கு நேர்ந்த வித்யாசமான அனுபவத்தினால்  சற்று சலனத்துடன் அவனறையில் கண்மூடிப்படுத்திருந்தான் விஷ்ணு. வெறும் கனவுதான் என்றாலும் ஏதோ ஒரு வகையில் அவனின் நிம்மதியை இக்கனவு இம்சித்துக்கொண்டிருந்தது.

          சம்பந்தமில்லாமல்  ஏன் இக்கனவு தன்னைத்  தொல்லைப்படுத்துகிறது என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்தவனின் கவனத்தில் வாசலில்  ஏதோ  நிழலாடுவதுபோன்ற  பிரமை  ஏற்படவே  தன்  சிந்தனையிலிருந்து  விடுபட்டு  வாயிலை நோக்கினான்.

          “ ஹலோ  விஷ்ணு …. என்ன  பண்ணிக்கிட்டு   இருக்கீங்க …. இப்போ  ஹெல்த்  பரவாயில்லையா… என்றபடி  கையில்  ஒரு கண்ணாடிக்  குடுவையில்  சாத்துக்குடிப்பழ ரசத்துடன்  அவனறையில்  பிரசன்னமானாள்  வேதா . 

            “  ஹ்ம்ம் ....இப்போ  பராவாயில்லை  வேதா        நான்  நல்லாத்தான்  இருக்கேன் .  பாவம்  என்னால  உங்க  ட்ரிப்  தான்  வேஸ்ட்  ஆகிடுச்சு . ஐ அம்  ஸாரி  வேதா “  என  கூறினான் .

            “ அச்சோ அதுல என்ன இருக்கு … பிக்னிக்கா இப்ப முக்கியம் . அதெல்லாம் ஒன்னும் அவசரம் இல்ல …நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க … பிக்னிக்லாம் பொறுமையா பார்த்துக்கலாம்" என்றாள் சிநேகப்புன்னகையுடன்.

       வேதாவிற்கு  விஷ்ணுவின் மீது சற்று கோபம் இருந்தாலும் கௌரி மற்றும் ராமின் கூற்றிலிருந்து விஷ்ணுவின் மீது ஓரளவு நல்ல அபிப்ராயம் ஏற்பட்டிருந்தது .   

                ஒரு  புன்சிரிப்புடன் அவளுக்கு  நன்றி  சொல்லி  பழரசத்தைப்  பருக  ஆரம்பித்தான் .

  “ ஹ்ம்ம்  நல்லா  இருக்கு  வேதா …நீங்க  குடிச்சீங்களா “ என்று  கேட்டான்  விஷ்ணு .

             “ இது  நானே  ப்ரிப்பேர்  பண்ணது விஷ்ணு … அதுவும்  வெரி ஃபர்ஸ்ட் டைம்  ட்ரை … அது  எப்படிங்க  உங்களுக்கு  தராம  நான்  சாப்பிட  முடியும் … நீங்க  குடிச்சி  டென் மினிட்ஸ்க்கு  உங்களுக்கு  எதுவும்  ஆகலைன்னா  அப்புறம்  நான்  குடிக்கிறேன் … “ என்றவளின்  வாய்மொழி  முதலில்  புரியாமல்  திருதிருவென்று  முழித்தவனுக்கு  சிறிது நேரம்  கழித்தே  அவள்  சொன்னது  உரைக்க “ யூ  நாட்டி  கேர்ள் …. என்னைப்  பார்த்தா  சோதனை  எலி  போல  தெரியுதா  உங்களுக்கு…. அதெல்லாம்  தெரியாது  நீங்களும்  பாதி  குடிங்க  எது  ஆனாலும்  ரெண்டு  பேருக்கும்  சேர்ந்து  ஆகட்டும் என்று  அருகிலிருந்த  டீப்பாயின் மேல் இருந்த இன்னொரு  குவளையில் பாதி  ஜூஸை  ஊற்றி  அவளுக்கும்  கொடுத்தான்.

அது மட்டும் ரகசியம்Dove le storie prendono vita. Scoprilo ora