21

1.3K 68 67
                                    

            வருண்  கூறுவதையே  இமைக்கவும்  மறந்து  கேட்டுக்கொண்டிருந்த  ஈஷ்வரபாண்டியன் “நிறுத்துடா….. நிறுத்து….எனக்கு நீ சொல்ற ஒன்னும்  புரியல …. நான்  உன்னை அந்த நிலவறைல  பார்த்தது  வரைக்கும்  தான்  எனக்கு  தெரியும் …. இன்னும்  இந்த  லிங்கத்தை  பத்தி  உனக்கு  எப்படி  தெரியும்னு  கூட எனக்கு  தெரியாது …. இதுல  விஷ்ணு  எங்க  இருந்து வந்தான்…அவனை உனக்கு எப்படித் தெரியும்… அவனுக்கும் உனக்கும்  என்ன சம்பந்தம் ...நீ என்னை  கொலை செய்ற அளவுக்கு  நான்  என்ன  தப்பு  பண்ணினேன் ….” என்று  குழப்பத்துடனும் ஆவேசத்துடனும் கூறிக்கொண்டே  சென்ற  ஈஷ்வரபாண்டியனை அமைதியாக  கையமர்த்திய  வருண் 

            “ அட  அட...பொறுமையா இருங்க  அங்கிள் அதுக்குள்ள என்ன அவசரம்...  இது  கூட  சொல்லாமயா  உங்களை  கொன்னுடுவேன்  இருங்க அதையும் சொல்றேன் …  “என்றவன் தன்  பூர்வ ஜென்மத்தில்  நிகழ்ந்த  அனைத்து  நிகழ்வுகளையும்  கூறி  முடித்தான் .  “ இப்ப  புரியுதா  நீங்க என்ன தப்பு பண்ணீங்கன்னு …. முதல்ல அந்த  மரகதலிங்கம்  எடுக்கப்போகும்போது என்ன  ஃபாலோவ் பண்ணி  வந்தீங்க  பாருங்க  அது தப்பு …. எவனோ  என்னவோ  பண்ணிட்டு  போறான்னு  விடாமா என்னை  பின்தொடர்ந்து  வந்து  அந்த  நிலவறைக்குகைக்குள்ள  வந்தீங்க  பத்தீங்களா  அது  இரண்டாவது  தப்பு …. அப்புறம்  போலீஸ்க்கு  போறேன்னு  சொல்லிட்டு  என்னையே  ஒரு  ஆட்டு  ஆட்டிட்டீங்க  பாருங்க  அது தான்  இருக்குறதுலேயே  மஹாபெரிய  தப்பு….  என்வாயாலேயே  என்  உழைப்பால  வர  போகிற  பணத்தை  பங்கு  போட  வச்சீங்க  பாருங்க  ….  இதையெல்லாம்  நினைக்க  நினைக்கத்தான்  அப்படியே  உங்களை  கொல்லனும்குற  ஆத்திரம்  வருது …. “ என்று  தன்  கையில்  இருந்த  துப்பாக்கியை  அவரை  நோக்கி  குறிப்பார்த்துக்கொண்டே  கூறினான் வருண். 

        “ வேண்டாம்  வருண் வேண்டாம்… நீ  ரொம்ப பெரிய  தப்பு  பண்ற …. இந்த மாதகரி விஷயமே வேண்டாம்னு சொன்ன என்னையும் உன் கூட சேர்ந்து தப்பு பண்ண வச்ச ...இந்த  முன்  ஜென்ம  கதையையும்  விஷ்ணுவையும்  பத்தி  முதல்லயே  சொல்வியிருந்தா  நான்  உன்னோட  இந்த  அயோக்கியத்தனத்துக்கு  உடந்தையா  இருந்திருக்கவே  மாட்டேன்.  …  போலீஸுக்குதான்  போயிருப்பேன் …. ராஸ்கல்"  என்று  கருவினார்  ஈஸ்வரபாண்டியன் . 

அது மட்டும் ரகசியம்Where stories live. Discover now