9

1.5K 93 158
                                    

                                         

                எப்படியாவது   அரியனையை    அபகரிக்க   வேண்டும்   என்ற  எண்ணம்   வளவனின்   மனதினில்   வேரூன்றியது .   அதற்காக   எந்த   எல்லைக்கும்   செல்ல   அவன்   தயாராக    இருந்தான் .   நேரடியாக   மோதி    இதை   சாதிக்க   முடியாது   என்பதை   நன்றாக    உணர்ந்த    அவன்   ஒரு    சதித்திட்டத்தை   தீட்ட    ஆரம்பித்தான் .    

          அவனின்   முதல்  எதிரி  அரசன்   ராஜசிம்மன்தான்  என்றாலும்   அவன்  அருகில்  கூட   யாரையும்   நெருங்கவிடாமல்   அரசனை  அரனாக   காக்கும்   விஷ்ணுவர்மனின்   மேல்தான்   அவனின்   கோபம்   இப்போது  திரும்பியது .  முதலில்  விஷ்ணுவர்மனை   அரசனிடம்   இருந்து  பிரிக்க  வேண்டும்   என   முடிவெடுத்தான் . 

          ஆனால் இருவரும் அரசர் சேனாதிபதி என்ற முறையைத்தாண்டி ஆத்ம சிநேகிதர்களாக இருப்பதால் இது சாத்தியமா என்ற ஐயமும் மனத்தினில் எழுந்தது. 

         அதை  எப்படி   செயலாற்றுவது ?  , என்ன  செய்தால்  இவன்  அரசனை  விட்டு   பிரிவான்  என  யோசித்துக்கொண்டிருக்கும்போது   அன்றொரு  நாள்   சிவாலயத்தில்   ராஜசிம்மன்   விஷ்ணுவிடம்  கூறியவை  நினைவில்   மோதின .   

           “விஷ்ணுவர்மா இந்த கோவிலில் உள்ள  சிவபெருமானின் லிங்கத் திருமேனி மரகதத்தால் ஆனது . அது இந்த கோவிலுக்கு மட்டுமல்ல நம் தேசத்திற்க்கே  கிடைத்த அரிய பொக்கிஷம்” . அதை  நம்மிடமிருந்து பறிக்கத்தான் அந்த வரகுணன் நம்மீது போர்த்தொடுத்தான் எனவும்  , பொதுவாகவே சில  குறிப்பிட்ட  ரத்தினங்களுக்கு  ஆக்ரக்ஷ்ன  ஷக்தி  உண்டு .  அந்த  வகையில்  மரகதத்தை  லிங்க  வடிவில்  வழிபடுவதன்  மூலம்  கேட்ட  வரத்தைப்   பெற முடியும் . மரகதத்தால் ஆன லிங்கத்திற்க்கு தோஷங்களை நிவரத்தி செய்யும் வல்லமையும் அந்த லிங்கம் இருக்கும் தேசத்திற்க்கும்  தேசத்தின் அரசனுக்கும்  செல்வ அபிவிருத்தி , நீண்ட ஆரோக்கியம் கிடைக்கும் என்பது காலங்காலமாக நம்பப்பட்டு வருகிறது. 

அது மட்டும் ரகசியம்Where stories live. Discover now