அறையையே நோட்டம் விட்டுக்கொண்டிருந்த விஷ்ணு அந்த இடத்தைப் பார்த்தவுடன் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் அப்படியே நின்றான் .
அவன் பக்கத்தில் நின்றிருந்த வேதாவும் அவன் பார்வை சென்ற திக்கை நோக்கினாள் .அந்த இடத்தில் உள்ளங்கை அகலத்தில் கரிய நிறத்தில் ஏதோ ஒன்று அசைந்தபடி இருந்தது . அதைக்கண்டவுடன் பயத்தில் விஷ்ணுவின் கையை கெட்டியாகப்பிடித்துக்கொண்டாள் .
“ விஷ்ணு.... ப்ளீஸ் விஷ்ணு .... எனக்கு ரொம்ப பயமா இருக்கு... வாங்க போய்டலாம் ... அதைப்பார்த்தா ஏதோ விஷ ஜந்து போல இருக்கு ... இந்த காட்டுல அதுவும் இந்த இடத்துல விஷப்பூச்சி இருக்க அதிக வாய்ப்பு இருக்கு ... இது அதுல ஒன்னா கூட இருக்கலாம் ... உங்களை கெஞ்சி கேட்டுக்கிறேன் வாங்க கிளம்பலாம்... இன்னும் இங்க என்னென்ன இருக்கோ ?" என்று அழமாட்டாத குறையாக கெஞ்சியவளுக்கு அங்குள்ள ஆக்ஸிஜனின் பற்றாக்குறை வேறு மூச்சுத்திணறலை ஏற்படுத்தியது .
வேதாவின் நிலையைக்கண்டு பதட்டமுற்றவன் அவளை அங்கிருந்து அழைத்துக்கொண்டு அக்குகையிலிருந்து வெளியேறினான் .
அந்த குகையிலிருந்து வெளியே வந்தவனின் மனமோ லிங்கத்தை தேட முடியவில்லையே என்ற சலனத்துடன் இருந்தது . ஆனால் வேதாவின் நிலையோ அவனை ஏதும் யோசிக்கவிடாமல் செய்து தடைப்போட்டது . அவளை அங்கிருந்து வெளியே கூட்டிவந்தவன் சற்று காற்றோட்டமாக உள்ள இடத்தில் அமரவைத்து தானும் அவள் அருகில் அமர்ந்தான் . வேதாவின் தலையை ஆதுரமாகத் தடவினான் .
“ சாரிடா வேதா ... என்னாலதானே உனக்கு இவ்வளவு
கஷ்டம் ... நான் உன்ன அங்க கூட்டிட்டே போய்ருக்க கூடாது . ஆதாரம் காமிக்கிறேன் அதிரசம் காமிக்கிறேன்னு உன்ன வேற இப்படி கஷ்டப்படுத்திட்டேன் ச்ச..எல்லாம் என்னை சொல்லனும்". என்று தன் தலையில் அடித்துக்கொண்டான் விஷ்ணு .

ESTÁS LEYENDO
அது மட்டும் ரகசியம்
Misterio / Suspensoகதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உதித்த முதல் கதை . தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றிங்கோ ....