சத்தம் சாளரத்தின் வழியாகத்தான் வருகிறது என்று ஊகித்த விஷ்ணு. சாளரத்தைநோக்கிச்சென்றான் அங்கே கிழிந்த ஆடைகளும் பல வருடங்களாக சவரத்திற்கு பழக்கப்பட்டிருக்காத நீண்ட தாடியுடனும் பார்ப்பதற்கு பைத்தியக்காரத் தோற்றத்திலிருந்த ஒருவன் இவனுடைய சாளரத்தையே வெறித்து நோக்கியவாறு “ வந்துட்டியா… நீ வந்துட்டியா… காலம் உன்னை கூட்டிட்டு வந்துடுச்சா…. உனக்காகதான் நான் காத்துகிட்டு இருந்தேன் … பிறவியின் நோக்கத்தை நிறைவேற்ற வந்துட்டியா “ என்றவாறு உளறிக்கொண்டிருந்தான் . விஷ்ணு ஒரு நிமிடம் ஸ்தம்பித்தாலும் இதையெல்லாம் கூறியவன் ஒரு புத்தி ஸ்வாதீனமில்லாதவன் என்பதை உணர்ந்து “அடச்சை இதுக்கா இப்படி பயந்தோம் கொடுமைடா சாமி" என்று தன் நிலைமையை எண்ணி சிரித்துக்கொண்டான்.
மறுபடியும் கட்டிலில் சென்று படுத்தான்.மெல்ல உறங்கியும் போய் ஆழ்ந்த துயிலில் அகப்பட்டுக்கொண்டான் நம் நாயகன்.
தன் காதலியைக் காண ஆவலுடன் ஓடி வரும் காதலனைப் போல ஆதித்யனும் ஓடி வந்து பொழுது புலர்ந்துவிட்டது என அனைவருக்கும் உணர்த்திக்கொண்டிருந்தான்.
ராம்,பாலா,ஜீவா மூவரும் சீக்கிரமே தயாராகி அவர்கள் அறையினின்று வந்தனர்."என்னடா நைட் எல்லாரும் நல்லா தூங்கனீங்களா? ஏதாவது அசௌகரியமா இருந்துதா? இருந்தா சொல்லுங்கடா சரி செய்துடலாம்". என்று ராம் கூறினான்.
"அட நீ வேற ஒரு பிரச்சனையும் இல்ல நல்லா தூங்கினேன்டா மச்சி.....". என பாலா சொன்னான்.
"ஆமாம்டா எனக்கும் செம தூக்கம். சூப்பர் கனவு கூட வந்துச்சு தெரியுமா?"என்று ஜீவா சொன்னான்.
"அப்படி என்ன கனவு வந்தது உனக்கு" என ராம் கேட்டான்.
"ஹிஹி ஆலியா பட் கூட கேண்டில் லைட் டின்னர் சாப்பிர மாதிரி வந்ததது மச்சி" என அசடு வழிய கூறினான் ஜீவா.
"அட கிராதகா கனவில கூடவாடா நீ சாப்பாட்டை மறக்க மாட்ட" என சிரித்துக்கொண்டே கூறினான் பாலா.

YOU ARE READING
அது மட்டும் ரகசியம்
Mystery / Thrillerகதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உதித்த முதல் கதை . தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றிங்கோ ....